22 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட மாளிகை! இதுதான் புருனே சுல்தான் குடியிருக்கும் உலகின் மிகப்பெரிய வீடு!

Published : Aug 28, 2023, 06:52 PM ISTUpdated : Aug 28, 2023, 07:05 PM IST

22 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ.11,600 கோடி மதிப்பில் பரந்து விரிந்து காணப்படும் ஆடம்பரமான வீடு புருனே நாட்டில் உள்ளது. இதுதான் உலகின் மிகப்பெரிய வீடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இது யாருக்குச் சொந்தமானது, இதன் சிறப்புகள் என்ன என்பதை இத்தொகுப்பில் காணலாம்.

PREV
13
22 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்ட மாளிகை! இதுதான் புருனே சுல்தான் குடியிருக்கும் உலகின் மிகப்பெரிய வீடு!
உலகின் மிகப்பெரிய வீடு

இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா (Antilia) மாளிகை உலகின் மிக ஆடம்பரமான வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. ஆனால், உலகின் மிகப்பெரிய வீடு என்ற பெருமைக்குச் சொந்தமானது புருனே சுல்தானின் வீடுதான்.

இஸ்தானா நூருல் ஈமான் என்பதுதான் அந்த மாளிகையின் பெயர். புருனே நாட்டு சுல்தான் ஹசனல் போல்கியா அந்நாட்டின் பிரதமராகவும் இருக்கிறார்.

3 மீ தொலைவில் பள்ளத்தைக் கவனித்து, வேறு பாதையில் நகர்ந்த பிரக்யான் ரோவர்!

23
புருனே சுல்தான் ஹசனல் போல்கியா

ஹசனல் போல்கியா சுல்தானாக முடிசூடிய பிறகு பல வருடங்களாக இந்த மாளிகையில் வசித்து வருகிறார். இவரது இஸ்தானா நூருல் ஈமான் மாளிகை பரப்பளவு அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய குடியிருப்பு என்ற பெருமையை தன்வசம் வைத்திருக்கிறது.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற லக்ஷ்மி விலாஸ் அரண்மனையைக் காட்டிலும் மிகப்பெரிய பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது இந்த இஸ்தானா நூருல் ஈமான் மாளிகை. குஜராத்தில் உள்ள அந்த அரண்மனை 8 லட்சம் சதுர அடி பரப்பு கொண்டது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா மாளிகை 4 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டது. ஆனால், புருனே சுல்தானின் மாளிகை  22 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது.

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1! செப். 2ஆம் தேதி ஏவப்படுவதாக இஸ்ரோ அறிவிப்பு!

33
இஸ்தானா நூருல் ஈமான் மாளிகை

கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் தன் பெயரைப் பதித்துள்ள இஸ்தானா நூருல் ஈமான் மாளிகையின் பெரும் பகுதி தங்கத்தால் கவசமிடப்பட்டது. கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக ஹசனல் போல்கியா இந்த மாளிகையில் வசிக்கிறார். 7 ஆயிரம் ஆரம்பர வாகனங்கள் இந்த மாளிகையில் உள்ளன.

இஸ்தானா நூருல் ஈமான் மாளிகையின் மதிப்பு ரூ.11,600 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. சுல்தான் ஹசனல் போல்கியாவுக்குச் சொந்தமான சொத்துகளின் மதிப்பு 2.49 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்றும் இதில் அவரது கார்கள் மதிப்பு மட்டும் 5 பில்லியன் டாலர் என்றும் சொல்லப்படுகிறது.

ஆதார் நம்பரை மட்டும் வைத்து வங்கிக் கணக்கை ஹேக் செய்ய முடியுமா?

click me!

Recommended Stories