தொப்பி அணியும் போது நினைவில் கொள்ள வேண்டியவை:
- நீங்கள் அணியும் தொப்பி சுத்தமாக இருக்க வேண்டும் அப்போதுதான் முடி உதிர்தல் ஏற்படாது.
- முடி உதிர்தலை தவிர்க்க கூந்தல் ஈரமாக இருக்கும் போது தொப்பி அணிய வேண்டாம். ஏனெனில் இதனால் முடியில் ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு அது வியர்வையுடன் கலந்து முடி உதிர்தலை அதிகரிக்க செய்யும். கூடுதலாக உச்ச தலையில் தொற்று பிரச்சனையை ஏற்படுத்தும்.
- கோடை வெப்பத்திலிருந்து தலைமுடியை பாதுகாக்க விரும்பினால் பருத்தியால் ஆன தொப்பியை பயன்படுத்துங்கள். பருத்தி வெப்பத்தை உறிஞ்சி விடும். இதனால் அதிகம் வியர்க்காது.
- முக்கியமாக நீண்ட நேரம் தொப்பி அணிவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் வியர்வையின் காரணமாக உச்சந்தலையில் பாக்டீரியாக்கள் வளரும்.