ரயில்வேயின் இலங்கை சுற்றுலா பேக்கேஜ்! ராமாயணப் பாதையில் பயணிக்கும் வாய்ப்பு!

First Published | Sep 16, 2024, 1:20 PM IST

IRCTC Sri Lanka Package: இலங்கைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனம் கவர்ச்சிகரமான சற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.

IRCTC Sri Lanka Package

இலங்கைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில், இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி (IRCTC) நிறுவனம் கவர்ச்சிகரமான சற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.

Indian Railways Sri Lanka Package

இந்தியாவின் புகழ்மிக்க இதிகாசமான ராமாயணத்தின் பாதைகள் வழியாக பயணிக்கவும், இலங்கையில் உள்ள மற்ற சுற்றுலாத் தலங்களைக் காண்பதற்கும் இந்தப் பயணம் ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும். இந்தப் பேக்கேஜில் இணையும் சுற்றுலாப் பயணிகள் கொழும்பில் இருந்து நுவரெலியா மலைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

Tap to resize

IRCTC Sri Lanka Tour

செப்டம்பர் 16ஆம் தேதி கொச்சியில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் விமானம் காலை 11.30 மணிக்கு இலங்கை சென்றடையும். சுற்றுலா பயணிகள் முதலில் தம்புள்ளை செல்லும் வழியில் உள்ள மானாவாரி முன்னேஸ்வரம் கோயிலுக்குச் செல்லலாம். இரவு அங்கு தங்கலாம். இரண்டாவது நாள் சீகிரிய கோட்டை மற்றும் தம்புள்ளை குகைக் கோயிலைச் சுற்றிப் பார்க்கலாம்.

Sri Lanka Tour Package

பின்னர், பயணிகள் திருகோணேஸ்வரம் கோயில் மற்றும் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் பிரார்த்தனை செய்யலாம். மூன்றாம் நாள் கண்டியை சுற்றிப் பார்க்க முடியும். ராயல் தாவரவியல் பூங்காவுக்கும் அழைத்துச் செல்லப்படுவார்கள். கண்டி கலாசார கண்காட்சி மற்றும் புனித பல்லக்கு ஆலயத்திற்குச் செல்வதும் பயணத்திட்டத்தில் அடங்கும். நான்காவது நாள் பஹிரவகந்த புத்தர் சிலையைப் பார்வையிடச் செல்லலாம். ரம்பொட ஹனுமான் கோவில் மற்றும் நுவரெலியாவில் உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு ஆகியவற்றுக்கும் சென்று பார்க்கலாம்.

Sri Lanka Railway Package

ஐந்தாம் நாள் காயத்ரி பீடம், சீதா அம்மன் கோயில், கிரிகோரி ஏரி மற்றும் திவுறும்பொல கோயில் ஆகிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ளலாம். பின்னவல யானைகள் சரணாலயத்தைப் பார்வையிட்ட பின்னர், தலைநகர் கொழும்புக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அங்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், களனி புத்தர் கோயில்களுக்குச் செல்லலாம்.

IRCTC Sri Lanka Tourism

கொழும்பு நகர சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா பயணிகளுக்கு மணிக்கூண்டு கலங்கரை விளக்க மாளிகை, காலே முகத்துவாரம், கொழும்பு துறைமுகம், பெய்ரா ஏரி, சுதந்திர சதுக்கம், தேசிய அருங்காட்சியகம் மற்றும் நெலும் பொகுண திரையரங்கம் போன்றவற்றை பார்வையிடும் வாய்ப்பு கிடைக்கும். மறுநாள் செப்டம்பர் 22ஆம் தேதி இரவு 8 மணி அளவில் சுற்றுலா பயணிகள் மீண்டும் விமானத்தில் கொச்சிக்குப் புறப்படலாம். 9.30 மணியளவில் விமானம் கொச்சி வந்தடையும்.

Kochi to Sri Lanka Tour Package

இந்த ஏழு நாள் சுற்றுப்பயணத்தின்போது, ​​பயணிகள் ராமாயணத்துடன் தொடர்புடைய அனைத்து சுற்றுலாத் தலங்களையும் ஆன்மீக மற்றும் புனித யாத்திரை மையங்களையும் பார்வையிடலாம். இந்தப் பயணத் தொகுப்புக்கான கட்டணம் ரூ.66,400 முதல் தொடங்குகிறது.

IRCTC Sri Lanka Tour Package 2024

இந்த பேக்கேஜ் கட்டணத்தில் விமான டிக்கெட்டுகள், உணவு, மூன்று நட்சத்திர தங்குமிடம், ஏசி வாகனங்கள், நுழைவு டிக்கெட்டுகள், விசா செலவுகள், ஆங்கிலம் பேசும் சுற்றுலா வழிகாட்டி, பயணக் காப்பீடு மற்றும் வரி ஆகியவை அடங்கும். ஐஆர்டிசியின் இலங்கை சுற்றுலாப் பயணத் திட்டம் பற்றி மேலும் விவரங்களுக்கு 8287932082 என்ற எண்ணில் ஐஆர்சிடிசியைத் தொடர்புகொண்டு விசாரிக்கலாம்.

Latest Videos

click me!