ஐஆர்சிடிசி சுற்றுலா பேக்கேஜ்: 28 ஆயிரம் இருந்தா அந்தமானுக்கு ரொமாண்டிக் டூர் போகலாம்!!

First Published | Oct 9, 2024, 9:05 AM IST

குடும்பத்துடன் ஜாலியாக 5-6 நாட்கள் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால், ஐஆர்சிடிசி அதற்கு அற்புதமான டூர் பேக்கேஜை வழங்குகிறது. கடற்கரைகளுக்குச் செல்ல விரும்புவோராக இருந்தால் ஐஆர்சிடிசியின் அந்தமான் டூர் பேக்கேஜை முன்பதிவு செய்யலாம்.
 

IRCTC Andaman Tour Package

அந்தமான் நிக்கோபார் தீவுகள் பல நூற்றாண்டுகளாக பயணிகளை ஈர்க்கும் கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக இருந்து வருகின்றன. இயற்கை எழில் நிரம்பிய அமைதியான கடற்கரைகள் கொண்ட தீவுகளில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடலாம். வங்காள விரிகுடாவில் உள்ள இந்தத் தீவுகளைப் பார்க்க ரயில்வே சிறப்பான சுற்றுலாத் திட்டங்களை வழங்கி வருகிறது.

IRCTC Romantic Andaman Holidays -Gold

ஐஆர்சிடிசி அந்தமான் டூர் பேக்கேஜின் (IRCTC New Tour Packages) முழு விவரங்களை இப்போது தெரிந்துகொள்வோம். இதன் முதன்மையான சிறப்பு அம்சம், இந்த பேக்கேஜில் எப்போது வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம். தினமும் இந்த பேக்கேஜ் செயல்பாட்டில் உள்ளது.

Tap to resize

IRCTC Andaman Tour

Romantic Andaman Holidays - Gold (ரொமாண்டிக் அந்தமான் விடுமுறை நாட்கள் - கோல்டு) என்று அழைக்கப்படும் இந்த பேக்கேஜில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் முன்பதிவு செய்து பயணிக்கும்போது, அந்தமானில் உள்ள ஹேவ்லாக், நீல், போர்ட் பிளேர் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல முடியும். மொத்தம் 5 இரவுகள் மற்றும் 6 பகல்கள் அந்தமானில் தங்கலாம். மூன்று வேளையும் உணவு, ஏசி வசதி கொண்ட ஹோட்டலில் தங்குமிட வசதி ஆகியவை இந்த பேக்கேஜில் அடங்கும்.

Railways Andaman Tour

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இயற்கை அழகு, சுத்தமான கடற்கரைகள் மற்றும் வளமான கடல்வாழ் உயிரினங்களுக்கு பெயர் பெற்றவை. அங்கு பார்க்கவேண்டிய முக்கிய இடங்களில் செல்லுலார் சிறையும் உள்ளது. இது 'காலா பானி' என்றும் அழைக்கப்படுகிறது.

Andaman Nicobar Islands

ஹாவ்லாக் தீவில் உள்ள வெள்ளை மணலும் நீல நிறத்தில் தோன்றும் நீரும் பிரசித்தி பெற்றவை. ராதாநகர் கடற்கரை ஆசியாவின் மிக அழகான கடற்கரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நீல் தீவு அமைதியான சூழலில் அழகான இயற்கைக் காட்சியைக் காணும் அனுபவதைக் கொடுக்கிறது.

Andaman Holidays

இது தவிர, ராஸ் தீவு , பரதாங்கின் சுண்ணாம்புக் குகைகள், மகாத்மா காந்தி கடல் தேசிய பூங்கா ஆகியவை சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமானவை. அந்தமானில் ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெலிங் மற்றும் நீர் விளையாட்டுகளும் பிரபலமானவை.

Andaman Tourism

இந்த டூர் பேக்கேஜில் தனியாக பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.55,135 கட்டணமாக வசூலிக்கப்படும். அதேசமயம், இரண்டு பேர் சேர்ந்து பயணம் செய்தால், ஒரு நபருக்கு ரூ.32,165/- கட்டணம் பெறப்படும். மூன்று நபர்களுக்கு புக் செய்யும்போது, தலா ரூ.28,500/- கட்டணம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும். 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுடன் டூர் பேக்கேஜில் பயணம் செய்யும்போது, ​​ஒரு நபருக்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

ஐஆர்சிடிசியின் www.irctctourism.com என்ற அதிகாரப்பூர்வ சுற்றுலா இணையதளத்தின் மூலம் இந்த அந்தமான் சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்யலாம். இந்த பேக்கேஜ் பற்றிய கூடுதல் தகவல்களை அளிய ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Latest Videos

click me!