Interesting Facts: அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான கரண்ட் கம்பங்கள், ஒயர்கள் வெளியே தெரிவதில்லை. அவை பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இதுபோல செய்வது சாத்தியம்தானா? அதிலுள்ள சவால்கள் என்னென்ன? பார்க்கலாம்.
அமெரிக்காவில் கரண்ட் ஒயர்கள் ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை?
அமெரிக்கா, UK போன்ற வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான மின்சார ஒயர்கள் பூமிக்கு அடியில்தான் இருக்கும். இதனால் தெருக்களில் கம்பங்களோ, ஆபத்தான முறையில் தொங்கும் ஒயர்களோ இருக்காது. முக்கிய நகரங்கள், வணிகப் பகுதிகள் மற்றும் நவீன புறநகர்ப் பகுதிகளில் இந்த முறையை கொண்டுவந்துவிட்டார்கள். இன்னும் சில இடங்களில் கம்பங்கள் இருந்தாலும், அந்த மின்சார லைன்களையும் ஒரு சிஸ்டமேட்டிக்கான முறையில் பராமரிக்கிறார்கள்.
25
பூமிக்கு அடியில் கேபிள் பதிக்க என்ன காரணம்?
அமெரிக்காவில் சுமார் 50% மின்சார லைன்கள் பூமிக்கு அடியில்தான் செல்கின்றன. இதனால், புயல், பலத்த காற்றுக்கு மின்கம்பங்கள் சாயும் அபாயம் இல்லை. நகரமும் பார்க்க அழகாகவும், சுத்தமாகவும் இருக்கும். பராமரிப்பு செலவும் குறைவு. ஆரம்பகட்ட செலவு அதிகம் என்றாலும், நீண்ட காலத்திற்கு இதுவே லாபகரமானது.
35
இந்தியாவில் அண்டர்கிரவுண்ட் கேபிளிங் சாத்தியம் இல்லையா?
இந்தியாவிலும் அண்டர்கிரவுண்ட் கேபிளிங் சாத்தியம்தான். பல நகரங்களில் இந்த மாற்றம் நடந்து வருகிறது. ஆனால், அமெரிக்காவைப் போல கிராமங்கள் வரை இதைச் செய்வது சவாலானது. ஏற்கெனவே இருக்கும் குறுகிய தெருக்கள், அதிக மக்கள் தொகை, தண்ணீர் மற்றும் கழிவுநீர்க் குழாய்களால், புதியதாகத் தோண்டி கேபிள் பதிப்பது கடினம். ஆனால், அகலமான பகுதிகளில் இது சாத்தியமே, நடந்துகொண்டும் இருக்கிறது.
அமெரிக்காவில் சாத்தியம், நம் நாட்டில் என்ன சிக்கல்?
அமெரிக்காவில் நிலப்பரப்பு அதிகம், மக்கள் தொகை குறைவு. ஆனால், இந்தியாவில் மக்கள் தொகை மிக அதிகம். இங்கு முழுமையாக அண்டர்கிரவுண்ட் சிஸ்டம் கொண்டுவர, திட்டமிடல் அவசியம். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் நகரங்களை உருவாக்கும்போதே இந்தத் திட்டத்துடன் உருவாக்கின. ஆனால், ஏற்கெனவே உருவான இந்திய நகரங்களில் இதைச் செய்வது பெரும் சவால். அதனால்தான் புதிதாக உருவாகும் நகரப் பகுதிகளில் இதைச் செய்கிறார்கள்.
55
இந்தியாவில் எங்கெல்லாம் இது நடக்கிறது?
சாதாரண ஒயர்களை விட, அண்டர்கிரவுண்ட் கேபிளிங் செய்ய 4 முதல் 10 மடங்கு வரை அதிக செலவாகும். ஆனாலும், பாதுகாப்பு மற்றும் நகர அழகிற்காக இந்திய அரசும் இதை ஊக்குவிக்கிறது. குஜராத்தில் 'Wire-Free City Mission' திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகிறது. பெங்களூரு, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களிலும் இந்தத் திட்டம் ஓரளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத்திலும் திட்டங்கள் தயாராகி வருகின்றன.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.