டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் உலகளாவிய உணவுகள், உணவு கலாச்சாரங்கள், சமையல் மரபுகளை மதிப்பிடும் பிரபலமான ஆன்லைன் தளமாகும். இந்த தளமானது உலகெங்கிலும் உள்ள பாரம்பரிய உணவுகள் மற்றும் உணவுப் பொருட்களை பற்றிய தகவல்களையும், உலகின் எந்த மூலையிலும் உள்ள உணவு வகைகளை தெரிந்து கொள்ளவும் உதவி புரிகிறது. ஒவ்வொரு உணவின் தோற்றம், செய்முறை, சுவை பற்றிய தகவல்களை இந்த தளம் வழங்கி வருகிறது. சிறந்த உணவகங்கள் மற்றும் உணவு அனுபவங்கள் பற்றிய தகவல்களையும் கொண்டுள்ளது. பயனர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை தரவரிசைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் உலகின் 100 சிறந்த உணவு வகைகளை கொண்டுள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
25
12-வது இடத்தைப் பிடித்த இந்தியா
அதில் கிரீஸ், இத்தாலி, மெக்ஸிகோ ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. வல்லரசு நாடான அமெரிக்காவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா, இந்தோனேஷியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் முன்னேறிச் சென்றுள்ளன. முதலிடம் பிடித்துள்ள கிரீஸ் உணவுகளின் மதிப்பீடு 4.6 ஆகும். இத்தாலி 4.59 மதிப்பெண்களை பற்றி இரண்டாவது இடத்திலும், மெக்சிகோ 4.52 மதிப்பெண்களை பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. நான்காவது இடத்தை பிடித்துள்ள ஸ்பெயின் 4.5 மதிப்பெண்களையும், ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள போர்ச்சுகல் 4.5 மதிப்பெண்களையும் பெற்றுள்ளன. இந்த வரிசையில் இந்தியா 4.42 மதிப்பெண்களைப் பெற்று 12-வது இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 4.42 மதிப்பெண்களை பிடித்திருந்த போதிலும் 13-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
35
இந்தியாவில் கட்டாயம் ருசிக்க வேண்டிய உணவுகள்
இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவுகள் பட்டியலில் ரொட்டி, நாண், பிரியாணி, பட்டர் சிக்கன், தந்தூரி சிக்கன், சட்னி ஆகியவை அடங்கியுள்ளது. ஆம்ரித்சரி குல்சா (Amritsari Kulcha) மற்றும் பட்டர் கார்லிக் நான் (Butter Garlic Naan) போன்ற சில இந்திய உணவுகள் கட்டாயம் முயற்சிக்க வேண்டியவை என்று டேஸ்ட் அட்லஸ் குறிப்பிட்டுள்ளது. இது தவிர இந்தியாவின் சில நகரங்களும் சிறந்த உணவுகளை கொண்ட நகரங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக இந்தப் பட்டியலில் மும்பை ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. டேஸ்ட் அட்லஸ் நிறுவனம் அவர்களது தரவுத்தளத்தில் உள்ள 15,478 உணவுகளுக்கு 4,77,287 செல்லுபடியாகும் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசியை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளது. நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களோ இல்லையோ இந்த தரவரிசை பட்டியல் உணவைப் போலவே ஆழமான மற்றும் விவாதத்திற்குரியவை என அந்நிறுவனம் கூறியுள்ளது.
2023-2024 ஆம் ஆண்டு வெளியான தரவரிசை பட்டியலில் உலக அளவில் சுவையான நூறு உணவுப் பொருட்களில் இந்தியா 11 உணவுகளை கொண்டுள்ளதாக அறிவித்திருந்தது. அதில் இந்தியாவில் பெரும்பான்மையாக பயிரிடப்படும் பாஸ்மதி அரிசி முதலிடம் பிடித்திருந்தது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் பாசுமதி அரிசி பெரும் அளவில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் மொத்தமாக 34 ரக பாசுமதி அரிசி பயிரிடப்படுகிறது. இரண்டாவது இடத்தில் இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ அரிசியும், மூன்றாவது இடத்தில் கரோலினோ அரிசி வகையும் இடம் பிடித்திருந்தன. கடந்த ஆண்டு வெளியான தகவலின் படி இந்தியாவை சேர்ந்த மேங்கோ லெஸ்ஸி உலகின் சிறந்த பால் பானம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
55
2025 பட்டியலில் இடம் பிடித்த மூன்று முக்கிய உணவுகள்
2025 ஆம் ஆண்டின் படி முர்க் மக்கானி என்று அழைக்கப்படக்கூடிய பட்டர் சிக்கன் மிகப் பிரபலமான உணவுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இது 100 சிறந்த உணவுகளின் பட்டியலில் 29-வது இடத்தையும், ஹைதராபாத் பிரியாணி 31 ஆவது இடத்தையும், மட்டன் கீமா நூறாவது இடத்தையும் பிடித்துள்ளன.