திருப்பதியில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் புனோவைச் சேர்ந்த சன்னி, சஞ்சய் தத்தாத்ரய்யா குஜார், ப்ரீத்தி சோனி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்று விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டனர்.