Cinnamon Tea: காலை எழுந்ததும் வெறும் வயிற்றில்...இந்த தண்ணீரை குடித்தால் நிகழும் அற்புதங்கள் பற்றி தெரியுமா..?

Published : Jul 08, 2022, 06:00 AM IST

Cinnamon Honey Tea: காலையில் வெறும் வயிற்றில்…இந்த இலவங்கப் பட்டைத் தண்ணீரை குடித்தால் நாள் புத்துணர்ச்சியாக மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் இருக்கும். 

PREV
16
Cinnamon Tea: காலை எழுந்ததும் வெறும் வயிற்றில்...இந்த தண்ணீரை குடித்தால் நிகழும் அற்புதங்கள் பற்றி தெரியுமா..?
cinnamon tea

பல்வேறு அற்புத குணம் நிறைத்த  இந்த தண்ணீரை குடித்தால், நீங்கள் புத்துணர்ச்சியாக மட்டுமின்றி, ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும், இது வாய் துர்நாற்றத்தை விரட்டவும், செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

26

நமது உடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வும் நமது வயிறு மற்றும் குடலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குடலுடன் தொடர்புடைய பிரச்சனைகள் தினசரி வழக்கத்தில் மாறுதல்களை ஏற்படுத்தலாம். இவற்றை சமாளிக்க நமக்கு கடினமாக இருக்கலாம். இவை தினசரி உங்களுக்கு பாதிப்பை உண்டு பண்ணலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் அன்றாட வழக்கத்தில் சரியான வகை உணவு பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் உங்கள் குடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிசெய்யலாம். 

மேலும் படிக்க.....Solam Nutrition: சோளம் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் தெரியுமா? நம் முன்னோர்கள் சொல்லி தந்த ஆரோக்கிய நன்மைகள்

 

36
cinnamon honey tea

உடல் உபாதைகள் தொடர்பான, எந்த பிரச்சனைகளுக்கு மருத்துவமனை சென்றாலும், டாக்டர்கள் கொடுக்கும், ஒரே அட்வைஸ் காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால் விட்டு விடுங்கள் என்பது தான்..எனவே, இனி காபி, டீக்கு மாற்றாக இந்த தண்ணீரை பருகினால் போதும், உடலில் புது தெம்பு கிடைக்கும். உடலுக்கு எந்த விதமான பிரச்சனைகளும் வராது. மேலும், நீங்கள் உங்கள் அன்றாட வழக்கத்தில் இந்த தண்ணீரை சேர்த்துக்கொள்ளலாம். அப்படி நீங்கள் அன்றாட காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கும் போது உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

46
cinnamon honey tea

செய்முறை விளக்கம்:

இலவங்கப் பட்டைத் தூளைச் 1/4 டீஸ்பூன் சேர்த்து, அரை கப் தண்ணீரில் 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அதனோடு 1 டீஸ்பூன்  தேன் சேர்த்து, சற்றே சூடு ஆறியவுடன் காலையில் வெறும் வயிற்றில் பருகவும். அதிகாலையில் இந்த தேநீரை வெறும் வயிற்றில் பருகுவது  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்துடன் ஆரோக்கியம் மேம்படும்.
 

 

56

இலவங்கப் பட்டையின் பயன்கள்:

1. இலவங்கப் பட்டையில் உடலைச் சரி செய்வதற்கான பல்வேறு ஊட்டச்சத்துகள் நிரம்பியதாக உள்ளது. அலர்ஜிகளுக்கு எதிராகவும், உடலில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வாகவும் இலவங்கப் பட்டை அமைகின்றன.

2. இலவங்கப் பட்டை மனவழுத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

மேலும் படிக்க.....Solam Nutrition: சோளம் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் தெரியுமா? நம் முன்னோர்கள் சொல்லி தந்த ஆரோக்கிய நன்மைகள்
 

66
cinnamon honey tea

3. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தி, மாதவிடாய் பிரச்சனையை சீராக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். அதுமட்டுமின்றி, இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்.வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

4. நீரழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்க உதவுகிறது.  இரத்தம் உறைதலைத் தடுக்கும். இரத்த புற்றுநோய், குடல் புற்று மற்றும் தசை புற்றுநோயைக் குறைக்கிறது. உடல் எடையை குறைக்கும். மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.

மேலும் படிக்க.....Solam Nutrition: சோளம் ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும் தெரியுமா? நம் முன்னோர்கள் சொல்லி தந்த ஆரோக்கிய நன்மைகள்
 

Read more Photos on
click me!

Recommended Stories