கோடை காலத்தில் இட்லி மாவு சீக்கிரம் புளித்து போகுதா? இதோ ஒரு எளிய டிப்ஸ்.! இப்படி பண்ணா மாவு கெட்டுப்போகாது.! இட்லி பஞ்சு மாதிரி வரும்.!

Published : Apr 20, 2026, 12:08 PM IST

Idli Maavu Pulikamal Iruka Enna Seiya Vendum : கோடை காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால் இட்லி மாவு விரைவாக புளித்து விடும். இதை கட்டுப்படுத்தும் எளிய வழிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
15
Idli Maavu Pulikamal Iruka Tips in Tamil

கோடை காலம் தொடங்கி விட்டாலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக உணவுப் பொருட்கள் விரைவாக கெட்டுவிடுவது, இட்லி மாவு சில மணி நேரங்களில் புளித்து விடுவது போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக மாவு விரைவாக புளித்து விடுவதால் அதன் சுவையும், மனமும் கெட்டு விடுகிறது. இந்த பிரச்சனைக்கு ஒரு தனித்துவமான மற்றும் பாரம்பரியமான தீர்வு உள்ளது. நாம் சமையலறையில் பயன்படுத்தும் சில பொருட்களை வைத்து இந்த பிரச்சனையிலிருந்து நாம் எளிதாக தீர்வு காண முடியும்.

25
இட்லி மாவு புளிக்கமால் இருக்க என்ன செய்வது

மாவு விரைவாக புளித்துப் போகாமல் இருப்பதற்கு வெற்றிலையைப் பயன்படுத்தலாம். வெற்றிலையை நன்றாக கழுவி விட்டு அதன் காம்புடன் அப்படியே மாவுக்குள் போட வேண்டும். வெற்றிலையின் அடிப்பகுதி (பின்புறம்) மாவின் மேல் படும்படி கவிழ்த்து வைக்க வேண்டும். மாவின் அளவுக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று வெற்றிலைகளை மாவின் மேற்பரப்பில் போட்டு வைத்தால் மாவு அவ்வளவு சீக்கிரம் புளிக்காது. வெற்றிலையில் உள்ள இயற்கையான வேதிப்பொருட்கள் மற்றும் தாதுக்கள் மாவில் பாக்டீரியாக்களின் வேகமான வளர்ச்சியை தாமதப்படுத்துகின்றன. இது மாவு அதிகப்படியான புளிப்பு சுவையை அடைவதை தடுக்கிறது.

35
இட்லி மாவு புளிப்பதை தாமதப்படுத்தும் வெற்றிலை

வெற்றிலை மாவின் pH அளவை சமநிலைப்படுத்தி நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. கோடைக் காலத்தில் வெப்ப நிலை அதிகரிக்கும் பொழுது புளிக்கும் செயல்முறையும் வேகம் பெறுகிறது. இதன் காரணமாக மாவு விரைவில் புளித்து ஒருவித வாசனையும் வரத் தொடங்குகிறது. மாவில் வெற்றிலையை போட்டு வைக்கும் பொழுது புளித்தல் முறை கட்டுப்படுத்தப்படுவதால் மாவு விரைவில் புளிப்பதில்லை. 

மேலும் வெற்றிலையில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் pH அளவை சமநிலைப்படுத்தும் பண்புகள் உள்ளன. எனவே மாவில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து, லாக்டிக் அமிலத்தின் அளவு அதிகப்படியாகாமல் இருப்பதை உறுதி செய்கிறது. இதனால் மாவு நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் சுவை மாறாமல் இருக்கிறது.

45
இட்லி மாவு புளிக்கமால் இருக்க டிப்ஸ்

மாவு அரைக்கும்பொழுது சாதாரண தண்ணீருக்குப் பதிலாக ஐஸ் கட்டிகள் அல்லது ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த ஐஸ் வாட்டர் சேர்த்து அரைத்தால் கிரைண்டர் சூடாகாமல் இருக்கும். இதனால் மாவு அரைத்த உடனேயே புளிக்கத் தொடங்குவது தவிர்க்கப்படும். அரைத்த மாவு முழுவதற்கும் உப்பு போட்டு வைக்க வேண்டும். தேவையான அளவு மாவை தனியாக எடுத்து உப்பு சேர்த்து பயன்படுத்தவும். உப்பு சேர்க்காத மாவு அவ்வளவு சீக்கிரம் புளிக்காது. கோடை காலத்தில் மாவு அரைக்கும் பொழுது வழக்கத்தை விட சற்று குறைவாக வெந்தயம் சேர்க்கலாம். வெந்தயம் குளிர்ச்சி என்றாலும் அது புளிப்புத் தன்மையை விரைவுப்படுத்தும் குணம் கொண்டது.

55
கவனிக்க வேண்டிய விஷயம்

கோடை காலங்களில் பிளாஸ்டிக் அல்லது மண் பாத்திரங்களில் மாவை ஊற்றி வைப்பது நல்லது. ஏனெனில் எவர்சில்வர் பாத்திரங்கள் வெப்பத்தை எளிதில் கடத்தி மாவை விரைவில் புளிக்கச் செய்து விடும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி கோடை காலத்தில் உங்கள் இட்லி மாவை புளிக்காமல் வைக்க முடியும். மேலும் வெற்றிலை சேர்க்கும் பொழுது அது செரிமானத்திற்கும் உதவும். வெற்றிலையில் இருக்கும் இயற்கையான நறுமணம் இட்லிக்கு தனித்துவமான சுவையை அளிக்கும். மேலும் எந்த ரசாயனமும் இல்லாத செயல்முறை என்பதால் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை. கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், வெற்றிலையை மாவின் மீது சாதாரணமாக வைக்க வேண்டும். மாவுடன் சேர்த்து அரைத்து விடக்கூடாது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories