மஞ்சள் பொடியில் வண்டு? ப்ரெஷா வைக்கும் சூப்பர் டிப்ஸ்!!

Published : Jun 12, 2025, 11:07 AM ISTUpdated : Jun 12, 2025, 11:14 AM IST

மஞ்சள் பொடியில் வண்டு, புழுக்கள் வராமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக வைக்க சில டிப்ஸ்கள் இங்கே உள்ளன. அது என்ன என்று பார்க்கலாம்.

PREV
15
How To Store Turmeric Powder For Long Time ?

மஞ்சள் பொடி சமையல் அறையில் இருக்கும் முக்கியமான மசாலா பொருள். இந்திய சமையலறையில் இது இல்லாமல் இருக்கவே இருக்க முடியாது. மஞ்சள் உணவுக்கு நிறத்தை கொடுப்பது மட்டுமல்ல பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளன. ஆனால் மஞ்சள் பொடி உட்பட்ட சில மசாலா பொடி வகைகளை நீண்ட நாள் சேமித்து வைக்க முடியாது. ஏனெனில் அவற்றில் வண்டு, பூச்சிகள் வந்துவிடும். இத்தகைய சூழ்நிலையில் மஞ்சள் பொடியில் பூச்சிகள் வண்டுகள் வராமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள கிச்சன் டிப்ஸ்கள் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

25
மஞ்சளின் பயன்:

மஞ்சள் வெறும் சமையலுக்கு மட்டுமல்ல இந்திய கலாச்சாரத்தில் புனிதமாகவும் கருதப்படுகிறது. அதோடு பல மருத்துவ குணங்களும் கொண்டுள்ளன. குறிப்பாக மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இது புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையை கொண்டுள்ளது. ஆனால் மஞ்சளின் முழு பலனை பெற நீங்கள் விரும்பினால் அதை சரியான விதத்தில் சேமித்து வைக்க வேண்டும். இல்லையெனில் அதன் நிறம் மற்றும் வீரியம் குறைந்துவிடும்.

35
மஞ்சள் பொடியை சேமிக்கும் முறை:

- மஞ்சள் பொடியை காற்று புகாத கண்ணாடி டப்பாவில் போட்டு சேமித்து வைக்க வேண்டும்.

- ஈரம் இல்லாத இடத்தில் மஞ்சள் பொடி டப்பாவை வைக்க வேண்டும்.

- மஞ்சள் பொடியை எடுக்க ஈரமில்லாத நன்கு உலர்ந்த ஸ்பூன் பயன்படுத்த வேண்டும்.

- மஞ்சள் பொடி அதிகமாக இருந்தால் அவற்றை ஒரே பாட்டிலில் சேமித்து வைக்காமல் தனித்தனியாக ஸ்டோர் செய்து பயன்படுத்துங்கள்.

45
பச்சை மஞ்சள் சேமிக்கும் முறை:

பச்சை மஞ்சளில் நிறைய மண் இருக்கும் என்பதால் முதலில் வாங்கிட்டு வந்தவுடனே ஓடும் நீரில் நன்கு அலச வேண்டும். மண் முழுமையாக நீங்கிய பிறகு அதன் மீது இருக்கும் ஈரம் முழுமையாக போகும்படி நன்கு உலர்த்த வேண்டும். பிறகு அதை ஒரு பேப்பர் டவலில் சுற்றி பிறகு காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். காய்கறிகள் சேமிக்கும் இடத்தில் இந்த டப்பாவை வைத்து ஸ்டோர் செய்யுங்கள். சில நாட்களுக்குப் பிறகு அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி ஜிப் லாக் கவரில் போட்டு ஃப்ரீசரில் சேமிக்கலாம்.

55
நினைவில் கொள் :

மஞ்சள் பொடி உள்ளிட்ட மசாலா பொருட்களை சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும் இல்லை என்றால் அது புத்துணர்ச்சியாக இருக்காது. கெட்டுப் போய்விடும். அதுபோல அதிக வெளிச்சம் உள்ள இடத்திலும் வைக்க வேண்டாம்.

Read more Photos on
click me!

Recommended Stories