ட்ரை ஃப்ரூட்ஸ் கெட்டுப்போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்க இதோ டிப்ஸ்..!!

Published : Jan 31, 2025, 02:04 PM IST

Dry Fruits Store Tips : உலர் பழங்கள் சீக்கிரமே கெட்டுப் போகாமல் நீண்ட நாட்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்க சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

PREV
15
ட்ரை ஃப்ரூட்ஸ் கெட்டுப்போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்க இதோ டிப்ஸ்..!!
ட்ரை ஃப்ரூட்ஸ் கெட்டுப்போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்க இதோ டிப்ஸ்..!!

தற்போது பெரும்பாலான மக்கள் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை கொண்டவர்களாக மாறிவிட்டனர். கெட்ட உணவு பழக்கங்கள் இருந்து விலகி இருந்து உலர் பழங்களை அதிகம் சாப்பிட்டு வருகின்றனர். உலர் பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சொல்லப்போனால் உலர் பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், உலர் திராட்சை என அனைத்துமே இதில் அடங்கும். இவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றங்கள்  மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. உலர் பழங்கள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்க உதவுகிறது. ஆனால் இவற்றின் விலை அதிகம். இத்தகைய சூழ்நிலையில் பலர் உலர் பழங்களை ஒரே நேரத்தில் அதிகமாக வாங்கி சேமித்து வைக்கிறார்கள். ஆனால் சில நேரங்களில் அவை கெட்டுவிடும். எனவே சில டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் உலர் பழங்களை நீண்ட நாள் பிரஷ்ஷாக சேமிக்க முடியும். அது என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

25
உலர் பழங்கள் கெட்டுப் போவதற்கான காரணங்கள்:

உலர் பழங்கள் கெட்டுப் போவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அவற்றை முறையாக சேமிக்காதது தான். அதாவது ஒளி மற்றும் காற்றின் வெளிப்பாடு உலர் பழங்களை விரைவில் கெட்டுப் போக வைக்கும். அவை காற்று மற்றும் ஒளியின் வெளிப்பாட்டின் காரணமாக ஆக்ஸினேற்றப்படுவதால் சீக்கிரமே கெட்டுப் போய்விடுகிறது. எனவே அவற்றை சரியான முறையில் சேமிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்.

இதையும் படிங்க: குளிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்திடுதா? அதை தடுக்க 5 சூப்பரான டிப்ஸ்!!

35
காற்று புகாத கொள்கலன்கள்:

பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் போன்ற உலர் பழங்களை நீண்ட நாள் சேமிக்க விரும்பினால், அவற்றை காற்று புகாத ஒரு கண்ணாடி ஜாடியில் சேமிக்க வேண்டும். முக்கியமாக பாட்டிலின் மூடியை இறுக்கமாக மூடி வைக்கவும். மேலும் பாட்டிலை அரை வேப்ப நிலையில் வைக்க வேண்டும்.

ஃப்ரிட்ஜில் இப்படி வைக்கவும்:

உலர் பழங்களை வாங்கி கெட்டுப் போகாமல் இருக்க ஃப்ரிட்ஜில் வைத்து சேமிக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்னதாக காற்று போகாத ஒரு கண்ணாடி ஜாடி அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிறகு ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். முக்கியமாக மூடியை இறுக்கமாக மூட மறந்து விடாதீர்கள். இல்லையெனில் உலர் பழங்களில் ஈரப்பதம் புகுந்து, விரைவில் கெட்டுப் போய்விடும். மேலும் பிரீசரில் இதை வைத்து சேமித்தால் ஒரு வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

இதையும் படிங்க: பூண்டு சீக்கிரம் முளைவிடாம ரொம்ப காலம் பயன்படுத்த சூப்பர் டிப்ஸ்!!

45
கிளிப் போடவும்:

நீங்கள் உலர் பழங்களை பாக்கெட்டுகளில் வாங்கி சேமிக்கும் போது, அவற்றின் மீது கிளிப் போட மறந்து விடாதீர்கள். இதனால் அவை கெட்டுப் போகாமல் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்கும்.

இதன் அருகில் வைக்க வேண்டாம்:

உலர் பழங்களை காரமான, ஈரமான மற்றும் வலுவான வாசனையிலிருந்து விலக்கி வைக்கவும் ஏனெனில் இவற்றில் இருந்து வரும் வாசனையால் அதை சீக்கிரமே கெட்டுப் போய்விடும். உலர் பழங்களை வைத்தால் விரைவாக கெட்டுவிடும். எனவே ஃப்ரிட்ஜில் வைக்கும் போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க மறக்காதீர்கள். மேலும் அறை வெப்பநிலையில் உலர் பழங்களை வைக்கும் போது மூடியை அடிக்கடி திறக்க வேண்டாம்.

55
இந்த தவறை செய்யாதீர்கள்:

- உலர் பழங்கள் இருக்கும் ஜாடியை சூரிய ஒளியில் வைக்க வேண்டாம். சூரிய ஒளி குறைவாக உள்ள இருண்ட இடத்தில் வைத்து சேமிப்பது தான் நல்லது. இப்படி சேமித்தால் மூன்று மாதங்கள் வரை ப்ரஷ்ஷாக இருக்கும்.

- பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை அவற்றின் ஓட்டில் பயன்படுத்துவது தான் நல்லது போட்டியில் இருக்கும். இதனால் அவை நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்கும்.

- உலர் பழங்களை சந்தையில் வாங்கும் போது அவற்றின் காலாவதியான தேதியை சரி பார்க்க வேண்டும். 

- அதுபோல் சேமித்த உலர் பழங்களில் இருந்து வித்தியாசமான வாசனை மற்றும் அதன் சுவை மாறி இருந்தால் உடனே தூக்கி எறிந்து விடுவது தான் நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories