புகை பிடிப்பதை நிறுத்த நினைக்கிறீங்களா? இந்த விஷயங்களை ட்ரை பண்ணி பாருங்க!

Published : Jan 31, 2025, 11:47 AM IST

புகை பிடிப்பது உடல்நலனுக்கு கெடுதல் என தெரிந்தாலும், சிலரால் அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வரமுடிவதில்லை. சரி இந்த புகைப்பழத்தில் இருந்து, நீங்கள் வெளியே வர நினைத்தால், சில எளிய முறைகளை கையாண்டால் போதும் அது உங்களுக்கு நல்ல பலன் தரும்.  

PREV
17
புகை பிடிப்பதை நிறுத்த நினைக்கிறீங்களா? இந்த விஷயங்களை ட்ரை பண்ணி பாருங்க!
புகைபிடிப்பது உடல் நலனுக்கு கேடு:

புகை பிடிப்பது மிகவும் கெடுதல் என்பது நம் அனைவரும் அறிந்தது தான். ஒவ்வொரு சிகரெட் பாக்கெட்டிலும், 'புகைபிடிப்பது உடல் நலனுக்கு கேடு' என்கிற வாசகமும், அதனால் ஏற்பட கூட விளைவு குறித்த புகைப்படங்களும் இடம்பெறுகிறது. ஆனாலும் பலர் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அடிமையாகி கிடக்கின்றனர்.
 

27
பல பிரச்சனைகளை கொண்டு வரும்:

சமீப காலமாக, சில ஃபிளேவருடன் கூடிய சிகரெட்களும் வர துவங்கி விட்டன. ஆனால், எந்த சிகரெட் புகைத்தாலும் அது உடல்நலனுக்கு பல பிரச்சனைகளை தான் கொண்டு வரும். அதிகமாக புகை பிடித்தால் நுரையீரல் பிரச்சினை, நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, நுரையீரல் புற்றுநோய், வாய் புற்றுநோய் போன்ற நிறைய பிரச்சனைகளை அவர்கள் சந்திக்க கூடும். ஒரு தடவ புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஒருவர் அடிமையாகிவிட்டால், அந்தப் பழக்கத்த விடுவது மிகவும் கடினமே. 

1 கிலோ 30 ஆயிரம்! உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த உப்பு எது தெரியுமா?
 

37
புகை பழக்கத்தில் இருந்து மீண்டு வர முயற்சி செய்கிறீர்களா?

ஒருவேளை நீங்கள் புகைக்கு அடிமையாகி, இப்போது அதில் இருந்து மீண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றால்... இது உங்களுக்கு தான். இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பாருங்க.
 

47
நிகோடின்:

புகை பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கு நிகோடின் எடுத்து கொள்ளலாம். இது உடம்புக்கு கொஞ்சம் நிகோடின் கொடுக்கும். ஆனால் சிகரெட்ல் இருக்கற அளவுக்குக் கெடுதல் இல்லை. பசி குறையறதுக்கு நிகோடின் உதவும். சாக்லெட்/சூயிங்கம் மாதிரி நிகோடின்கள் மெடிக்கல் ஷாப்களில் கிடைக்கிறது. ஒரே நாள்ல பலன் கிடைக்காது என்றாலும், தொடர்ந்து பயன்படுத்தினால் புகை பிடிக்கும் பழக்கத்த கைவிடலாம்.

திகில் மற்றும் வன்முறை படங்களை பார்ப்பதால் ஏற்படும் பாதிப்புகள்!
 

57
டென்ஷன் ஆவதை குறைந்து கொள்ளுங்கள்:

ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் புகை பிடிக்கின்றனர். புகை பிடிக்கிறதை விட வேண்டும் என்றால் பார்ட்டிக்குப் போவதை, போனில் அதிக நேரம் பேசுவதை, டென்ஷன் ஆவதை எல்லாம் குறைந்து கொள்ளுங்கள். இப்போதெல்லாம் டென்ஷன் குறைவதாக சிகரெட் பிடிக்கறேன்னு பலர் சொல்றாங்க. டென்ஷன் அதிகமா இருந்தா யோகா, தியானம் பண்ணுங்க. புகை பிடிக்கறத விடறதுக்கு உடற்பயிற்சி பண்ணனும். ஓடறது, நடக்கறது, ஜிம்முக்குப் போறதுனு ஏதாவது பண்ணுங்க. இப்படி பண்றதால புகை பிடிக்கற ஆசை குறையும்.
 

67
உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளாதீர்கள்:

சில பேர், தினமும் ஒரு சிகரெட்தான் பிடிப்பேன்னு மனசுல நினைச்சுட்டுப் பிடிப்பாங்க. ஆனா இப்படிப் பண்றது நம்மளையே நம்ம ஏமாத்திக்கற மாதிரி தான். ஒரு சிகரெட் பிடிச்சா, இன்னும் பிடிக்கணும்னு தோணும். அதனால சிகரெட் பிடிக்கணும்னு தோணும்போது, அந்த ஆசையக் கட்டுப்படுத்துங்க. 

வாட்டர் டேங்கில் பாசியா? உள்ளே இறங்காமலே 'ஈஸியா' சுத்தம் செய்ய சூப்பரான '1' டிப்ஸ்!!
 

77
புகைபிடிக்கும் ஆசையை கட்டு படுத்தும் வழிகள்:

எந்தக் காரணத்தைக் கொண்டும் சிகரெட் பிடிக்க மாட்டேன்னு நினைச்சுக்கணும். புகை பிடிக்கற ஆசையக் கட்டுப்படுத்த, ரிலாக்சேஷன் டெக்னிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க. ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி, யோகா, பாட்டு கேட்கறது, இல்லன்னா உங்களுக்குப் பிடிச்ச ஏதாவது ஒரு விஷயம் பண்ணுங்க. ஒவ்வொரு வருஷமும் மே 31 புகையிலை எதிர்ப்பு தினமா கொண்டாடப்படுது.

click me!

Recommended Stories