Washing Machine: வாஷிங் மெஷினில் துவைக்கும் துணிகள் ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொண்டு பட்டன்கள் எல்லாம் பிச்சுகொண்டு வருகிறதா? துணிகள் சுருங்காமல், சிக்காமல் தனித்தனியாக வர வைக்கும் சூப்பர் ட்ரிக் குறித்து பார்ப்போம்.
வாஷிங் மெஷினில் துணி துவைப்பது எளிதுதான். ஆனால், துவைத்த பிறகு அதை வெளியே எடுப்பது பெரிய தலைவலி. ஷர்ட், பேண்ட், சுடிதார் ஷால் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து சிக்கலாக மாறிவிடும். அதைப் பிடித்து இழுக்கும்போது துணி கிழிவது, பட்டன் பிச்சுகொண்டு வருவது அல்லது ரொம்பச் சுருங்கிப் போவது வழக்கமாக நடக்கும்.
25
இந்தப் பிரச்சனைக்கு எளிதான தீர்வு
இந்தத் தலைவலிக்கு ஒரு சூப்பர் தீர்வு இருக்கிறது. அதுதான் ‘சிலிகான் லாண்ட்ரி பால்ஸ்’ (Silicone Laundry Balls). இது நிஜமாகவே வேலை செய்யுமா? இதை எப்படிப் பயன்படுத்துவது? எங்கே கிடைக்கும்? விலை என்ன? இதோ முழு விவரம்.
35
சிலிகான் லாண்ட்ரி பால் எப்படி வேலை செய்யும்?
இந்தச் சிறிய பந்துகள் மிகவும் மென்மையான சிலிகான் அல்லது ரப்பரால் செய்யப்பட்டவை. வாஷிங் மெஷினில் துணிகளைப் போடும்போது, அதனுடன் சேர்த்து 4 முதல் 6 சிலிகான் லாண்ட்ரி பந்துகளையும் உள்ளே போட்டு மெஷினை ஆன் செய்யுங்கள்.
மெஷின் சுழலும்போது இந்தப் பந்துகளும் துணிகளுக்கு நடுவே தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும். இதனால் துணிகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கசங்குவதையும், முடிச்சு விழுவதையும் இந்தப் பந்துகள் இயற்கையாகவே தடுத்து நிறுத்தும்.
துணிகள் எளிதாகப் பிரியும்: வாஷ் முடிந்ததும் துணிகளை வெளியே எடுக்கும்போது, எந்தச் சிக்கலும் இல்லாமல் ஒவ்வொரு துணியும் தனித்தனியாக ரொம்ப எளிதாக வரும்.
சுருக்கங்கள் குறையும்: துணிகள் ஒன்றுடன் ஒன்று சுற்றிக் கொள்ளாததால், துணியில் அதிக சுருக்கங்கள் விழாது. இதனால் இஸ்திரி (Iron) செய்யும் வேலையும் மிச்சமாகும்.
சூப்பர் கிளீனிங்: இந்தப் பந்துகள் துணியில் உரசும்போதே அழுக்கும் கறைகளும் சீக்கிரமாகச் சுத்தமாகிவிடும்.
துணிகள் டேமேஜ் ஆகாது: துணிகளைப் பிடித்து இழுக்க வேண்டிய அவசியமே இருக்காது. இதனால் துணியின் ஆயுளும் அதிகரிக்கும்.
55
எங்கே கிடைக்கும்?
1. ஆன்லைனில் ரொம்ப எளிதாக கிடைக்கும்
Amazon (அமேசான்), Flipkart (பிளிப்கார்ட்) மற்றும் Meesho (மீஷோ): இதில் நீங்கள் "Silicone Laundry Balls" அல்லது "Washing Machine Cleaning Balls" என்று தேடினால் போதும், உடனே கிடைக்கும்.
சில நகரங்களில் இருக்கும் இந்த குவிக் காமர்ஸ் ஆப்களின் 'Home Needs' பகுதியிலும் இது கிடைக்கும்.
2. ஆஃப்லைன் கடைகளில்
டி-மார்ட் (D-Mart) அல்லது ரிலையன்ஸ் ஸ்மார்ட் பஜார்: பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் இருக்கும் 'பிளாஸ்டிக் / கிளீனிங் ஐட்டம்ஸ்' பகுதியில் கிடைக்கும். உள்ளூர் பிளாஸ்டிக் கடைகள், ஹோம் யூட்டிலிட்டி கடைகளிலும் இதை வாங்கலாம்.
விலை எவ்வளவு?
இது ரொம்பவே மலிவானது.ாதாரணமாக 4 முதல் 8 பந்துகள் கொண்ட ஒரு பேக் ரூ.99 முதல் ரூ.200 வரை கிடைக்கும். இது ரப்பர் / சிலிகான் மெட்டீரியல் என்பதால் பல வருடங்களுக்கு இதைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.