தேவையற்ற முடிகளை 5 நிமிடத்தில் நீக்க இப்படி கூட வழி இருக்கா?

Published : Jun 02, 2026, 01:46 PM IST

ஃபேஷியல் ஹேர், கைகள் மற்றும் கால்களில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க பார்லருக்குப் போய் ஆயிரக்கணக்கில் செலவு செய்து, வாக்ஸிங் (Waxing) வலி தாங்கி அலுத்துப் போயிருக்கா? இனி அந்த கவலையே வேண்டாம்!

PREV
15
மேஜிக் பேஸ்ட்:

இந்த மேஜிக் பேஸ்ட் தயாரிக்க உங்களுக்கு பார்லர் பொருட்கள் எதுவும் தேவையில்லை. கடலை மாவு – 2 ஸ்பூன், பேக்கிங் சோடா (ஆப்ப சோடா) – அரை ஸ்பூன், காய்ச்சாத பால் அல்லது எலுமிச்சை சாறு – தேவையான அளவு, கஸ்தூரி மஞ்சள் – ஒரு சிட்டிகை.

25
எப்படித் தயாரிப்பது?

ஒரு சின்ன கிண்ணத்தில் கடலை மாவு, பேக்கிங் சோடா மற்றும் கஸ்தூரி மஞ்சள் தூளைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இதனுடன் காய்ச்சாத பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கட்டிகள் இல்லாமல் ஒரு திக்கான பேஸ்ட் பதத்திற்கு (பேக் போடுவது போல) ரெடி பண்ணி வையுங்கள்.

35
அப்ளை செய்யும் ரகசியம்:

முடிகளை நீக்க வேண்டிய இடத்தில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள். முக்கியமாக, முடிகள் எந்த திசையில் வளர்கிறதோ (Hair Growth Direction), அதே திசையிலேயே மேல்நோக்கியோ அல்லது கீழ்நோக்கியோ தடவ வேண்டும். அப்படியே 5 நிமிடங்களுக்கு காய விடுங்கள்.

45
'வலியற்ற' வாக்ஸிங் ட்ரிக்:

5 நிமிடம் கழித்து பேஸ்ட் லேசாக காய்ந்ததும், தண்ணீரைத் தொட்டு தேய்க்கக் கூடாது. முடிகள் வளர்ந்த திசைக்கு எதிர் திசையில் (Opposite Direction) உங்கள் விரல்களால் மெதுவாக ஸ்க்ரப் (Scrub) செய்து தேய்க்க வேண்டும். பேக்கிங் சோடாவும் கடலை மாவும் சேர்ந்து முடியின் வேர்க்கால்களை பலவீனப்படுத்தி, வலியே இல்லாமல் முடியை உதிரச் செய்யும்.

55
குளு குளு ஃபினிஷிங்:

முடிகள் நீங்கிய பிறகு அந்த இடத்தை குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள். இறுதியாக, சருமத்தில் எரிச்சல் வராமல் இருக்கவும், துவாரங்கள் அடைபடுவதற்கும் கொஞ்சம் 'ஐஸ் கியூப்' அல்லது 'அலோவேரா ஜெல்' தடவினால் வேலை முடிந்தது! சருமம் அம்புட்டு சாஃப்ட்டா மாறும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories