Cleaning Tips: வீட்டில் உள்ள டிவி, லேப்டாப், பர்னிச்சர்களில் அதிக தூசு படிகிறதா? வீட்டைத் துடைத்த சிறிது நேரத்திலேயே மீண்டும் தூசு வந்துவிடுகிறதா? சாதாரண துணியால் துடைத்தால் தூசு போகாது. அதை எப்படி எளிதாகச் சுத்தம் செய்வது என பார்க்கலாம்.
வீட்டில் தூசுக்கு குட்பை சொல்லும் 5 சூப்பர் டிப்ஸ்
பண்டிகை காலம் நெருங்கிவிட்டது. வீடுகளில் இப்போது அலங்கார வேலைகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. ஆனால், காலையில் வீட்டைச் சுத்தம் செய்த சில மணி நேரங்களிலேயே மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பிவிடுகிறது. டிவி ஸ்கிரீன், பிரிட்ஜ், பீரோ, ஷோகேஸ் கண்ணாடிகளில் தூசு படிந்துவிடுகிறது. நம்மில் பலரும் செய்யும் பெரிய தப்பு என்னவென்றால், காய்ந்த துணி அல்லது துடைப்பத்தை வைத்துத் தூசு தட்டுவதுதான்.
இதனால் என்ன ஆகும் தெரியுமா? தூசு சுத்தமாகாது, மாறாக காற்றில் கலந்து சிறிது நேரத்திலேயே மீண்டும் அதே இடத்தில் வந்து உட்கார்ந்துவிடும். தூசு அலர்ஜி உள்ளவர்களுக்கு இது இன்னும் ஆபத்தானது. தும்மல், இருமல், மூச்சுத்திணறல் வரலாம். அதனால், தூசியைச் சுத்தம் செய்யச் சரியான முறையை தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம்.
24
காய்ந்த துணி வேண்டாம்
சாதாரண துண்டு அல்லது பழைய துணிகளைத் தூக்கிப் போடுங்கள். கடைகளில் 50 ரூபாய்க்கு கிடைக்கும் மைக்ரோஃபைபர் டஸ்டரை வாங்குங்கள். இது காந்தம் மாதிரி தூசியை இழுத்துக்கொள்ளும். இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றால், துணியை லேசாக நனைத்து, தண்ணீர் இல்லாதபடி நன்றாகப் பிழிந்துகொள்ளுங்கள். லேசான ஈரப்பதம் மட்டும் இருக்க வேண்டும். அதன்பிறகு துடைத்துப் பாருங்கள், ஒரே முறை துடைத்தாலே தூசு காணாமல் போய்விடும்.
எலக்ட்ரானிக் பொருட்களில் தண்ணீர் படவே கூடாது
டிவி, லேப்டாப், கம்ப்யூட்டர் மானிட்டர், ஏசி போன்றவற்றில் நேரடியாக ஈரத்துணியைப் பயன்படுத்தினால் ஷார்ட் சர்க்யூட் ஆகலாம் அல்லது ஸ்கிரீன் வீணாகிவிடும். முதலில் ஒரு மென்மையான பிரஷ், பழைய டூத்பிரஷ் அல்லது மேக்கப் பிரஷ்ஷை வைத்து இடுக்குகளில் உள்ள தூசியை எடுங்கள். பிறகு மைக்ரோஃபைபர் துணியால் லேசாகத் துடையுங்கள். வாரத்துக்கு ஒருமுறை வேக்யூம் கிளீனரின் சிறிய நாசிலைப் பயன்படுத்தி ஏசி ஃபில்டர், டிவியின் பின்புறம், பிரிட்ஜின் பின்புறம் உள்ள காயில்களில் இருக்கும் தூசியை உறிஞ்சி எடுங்கள். இதனால் கரண்ட் பில்லும் குறையும், பொருட்களும் நன்றாக இருக்கும்.
34
மேலிருந்து கீழாகச் சுத்தம் செய்யுங்கள்
இதுதான் கிளீனிங்கின் கோல்டன் ரூல். நிறைய பேர் முதலில் தரையைத் துடைத்துவிட்டு, அப்புறம் டேபிளைத் துடைப்பார்கள். இதனால் டேபிளில் உள்ள தூசு மீண்டும் தரையில்தான் விழும். அதனால், முதலில் சீலிங் ஃபேனில் ஆரம்பித்து, பீரோவின் மேல் பகுதி, சுவரில் உள்ள அலமாரிகள், டேபிள், நாற்காலி எனச் சுத்தம் செய்துவிட்டு, கடைசியாகத் தரையைத் துடையுங்கள்.
இந்த மேஜிக் தண்ணீரை ரெடி பண்ணுங்க
ஒரு வாளி தண்ணீரில் 1 ஸ்பூன் ஃபேப்ரிக் சாஃப்ட்னர் அல்லது கண்டிஷனர் மற்றும் சில சொட்டு வினிகர் கலந்து கொள்ளுங்கள். இந்தத் தண்ணீரில் துணியை நனைத்து மர பர்னிச்சர்களைத் துடையுங்கள். ஃபேப்ரிக் சாஃப்ட்னர் பர்னிச்சர் மீது ஒரு கண்ணுக்குத் தெரியாத லேயரை உருவாக்கும். இதனால் தூசு அவ்வளவு சீக்கிரம் படியாது. உங்கள் வீடு 3-4 நாட்கள் வரை பளபளப்பாக இருக்கும். மர பர்னிச்சர்களுக்கு பிளெட்ஜ் அல்லது ஆலிவ் ஆயிலையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
சும்மா துடைத்தால் மட்டும் போதாது, தூசு உள்ளே வருவதையும் தடுக்க வேண்டும். ஜன்னல்களில் மெல்லிய நெட் அடியுங்கள். கதவுக்கு அடியில் டிராஃப்ட் ஸ்டாப்பர் அல்லது டோர் ஸ்ட்ரிப் பொருத்துங்கள். தினமும் காலையில் 10 நிமிடம் மட்டும் ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டு, மற்ற நேரங்களில் மூடியே வைத்தால் தூசு வருவது கணிசமாக குறையும். பூஜை பண்டிகைக்கு முன்னாடி இந்த டிப்ஸ்களை ஃபாலோ பண்ணாலே போதும், உங்க வீடு பளபளக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.