
பொதுவாக குழந்தைகள் சிரிக்கும் போதும், விளையாடும்போதும் ரொம்பவே அழகாக இருப்பார்கள். ஆனால் சில சமயங்களில் அவர்களது செயலானது மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். அதாவது, அவர்கள் கோபத்தை தான் ஆக்ரோஷமான செயல் மூலம் காட்டுகின்றனர். இருப்பினும் அவர்களது இந்த செயலுக்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அதை பெற்றோர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைகளின் இத்தகைய ஆக்ரோஷமான நடத்தையை அவர்கள் குறைக்க முடியும். எனவே, குழந்தைகள் கோபப்படுவதற்கான காரணங்கள் மற்றும் அவர்களை அதிலிருந்து தணிப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குழந்தைகள் கோபப்படுவதற்கான காரணங்கள்:
சில குழந்தைகள் இயல்பாகவே முரட்டுத்தனமாக இருப்பார்கள். இன்னும் சிலரோ சில பல காரணங்களால் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள். குழந்தைகளிடம் இருக்கும் இந்த முரட்டுத்தனம் திடீரென தோன்றியிருந்தால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதாவது கல்வி மன அழுத்தம், குடும்ப சூழல், தனிமை, பெற்றோரின் அன்பு இல்லாமை, தேவைகள் அல்லது ஆசைகளை பெற்றோர்கள் புறக்கணித்தல் மற்றும் சமூகத்தின் நிராகரிப்பு போன்றவை இதில் அடங்கும். இது தவிர, பெற்றோர்களின் கவனத்தை ஈர்க்காகவும் சில சமயங்களில் குழந்தைகள் முரட்டுத்தனமாக நடந்து கொள்வார்கள்.
இதையும் படிங்க: ஒரு பிள்ளை இருக்கும் பெற்றோர் செய்யக்கூடாத '5' தவறுகள்.. பின்விளைவுகள் பயங்கரம்
குழந்தைகளின் கோபத்தை தணிக்க டிப்ஸ்:
ஒன்று..
குழந்தைகளின் முரட்டுத்தனமான நடத்தை பிறரை எவ்வாறு பாதிக்கும் மற்றும் உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. எனவே பெற்றோர்களாகிய நீங்கள் குழந்தையுடன் பேசி அவர்களது இந்த செயல் தவறு என்று அவர்களுக்கு அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். மேலும் அவர்கள் சில காரணங்களுக்காக இப்படி செய்தால் அதற்கான சரியான தீர்வை சொல்லவும். இந்த நாள் இந்த நடத்தையானது குழந்தைகளின் இயல்பின் ஒரு பகுதியாக மாறிவிடாது.
இரண்டு..
பொதுவாக குழந்தைகள் எதையும் கற்றுக் கொள்வது என்பது அவ்வளவு எளிதல்ல. சில சமயங்களில் சில பெற்றோர்கள் பயமுறுத்தி குழந்தைகளை வளர்ப்பார்கள். ஆனால் அது தவறு. எனவே குழந்தைகள் சொல்பேச்சை கேட்கவில்லை என்றால், முரட்டுத்தனமாக மீண்டும் மீண்டும் நடந்து கொண்டால், அவர்களுடன் யாருமே பேச மாட்டார்கள்.. விளையாட மாட்டார்கள் என்று நீங்கள் சொன்ன பிறகும் அவர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்தால், நீங்கள் அதை அப்படியே விட்டு விடாமல் அவர்களுக்கு அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் செய்தது தவறு என்று.
மூன்று..
நீங்கள் கற்றுக் கொடுப்பதற்கு முன் முதலில் நீங்களே ஒரு முன்மாதிரியாக இருங்கள் நீங்கள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதை பார்த்துதான் உங்கள் குழந்தையும் கற்றுக் கொள்வார்கள். எனவே, உங்களது நடத்தை மூலம் உங்கள் குழந்தைக்கு கற்பிக்கும் முயற்சி செய்யுங்கள். முக்கியமாக உங்களுக்கு குழந்தை பிறருடன் நன்றாக நடந்து கொள்ளும்போது உடனே பாராட்டுங்கள். பிறரிடம் நடந்து கொண்டால் மதிப்பு, அன்பு, மரியாதை கிடைக்கும் என்று அவர்களுக்கு எடுத்துச் செல்லுங்கள்.
நான்கு..
உணர்ச்சிகளை சரியான முறையில் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம். எனவே உங்கள் குழந்தைக்கு கோபத்தை சரியான முறையில் வெளிப்படுத்த கற்றுக் கொடுங்கள் மேலும் உங்கள் குழந்தை கோபமாக இருக்கும் போது மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் கொடுங்கள்.
இதையும் படிங்க: பெற்றோர் குழந்தைங்க கிட்ட 'எப்படி' நடந்துக்கனும்? முக்கியமான '5' டிப்ஸ்
ஐந்து..
குழந்தைகள் பிறரிடம் அன்பாக நடந்து கொள்ள அவர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுங்கள் மற்றும் அவர்களை உதவி போன்ற செயல்களில் ஈடுபடுத்துங்கள். இதனால் அவர்களுக்குள் பச்சபாதம் மற்றும் பிறருக்கு உதவும் உணர்வு வளரும்.
முக்கிய குறிப்பு:
நீங்கள் உங்களது குழந்தைக்கு பொன்னான நேரத்தை கொடுத்து அவர்களை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை புரிந்துகொள்ளும் போது அவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது, அதற்கான காரணத்தையும் உங்களிடம் சொல்ல வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு குழந்தையின் இடத்தில் மாற்றங்கள் கொண்டுவர வரைதல், வீட்டை சுத்தம் செய்தல், இசை கேட்டல் போன்றவற்றில் அவர்களை ஈடுபடுத்துங்கள்.