parenting tips in tamil
பொதுவாகவே ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தை வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தை பருவத்தில் இருந்தே அவர்களுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுப்பார்கள். அந்த வகையில், குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களை உடல் ரீதியாக மட்டுமல்ல மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் வலிமையாக இருக்கும்படி வளர்க்க வேண்டும். ஏனெனில், மனதளவில் வலிமையுள்ள குழந்தை எப்பேற்பட்ட சவால்களையும் எளிதில் எதிர்கொள்வார்கள். முக்கியமாக அவர்களது வாழ்க்கையில் பல சிரமங்களை சந்தித்தாலும் அதை எளிதில் எதிர்க்கொண்டு அதற்கான தீர்வையும் காண்பார்கள். மேலும் குழந்தைகள் மனதளவில் வலிமையாக இருக்கும் போது அவர்கள் கடினமான மற்றும் பாதகமான சூழ்நிலையில் இருந்து எளிதாக வெளியேறுவார்கள்.
Child mental health in tamil
இத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தையையும் நீங்கள் மனதளவில் வலிமையாக விரும்புகிறீர்களா? ஆனால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தையை மனரீதியாக வலிமையாக முடியும். அவை என்ன என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: குழந்தைகள் பார்க்குறப்ப பெற்றோர் செய்யக் கூடாத '4' மோசமான விஷயங்கள்!!
Ways to Build Mental Strength in Children in tamil
குழந்தையை மனரீதியாக வலிமையாக்க சில குறிப்புகள் இங்கே.
உணர்ச்சித் தொடர்பு:
உணர்ச்சி தொடர்பு என்பது குழந்தையை மனரீதியாக வலிமையாக அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய மிகவும் முக்கியமான வாழ்க்கை திறன்களில் ஒன்று. இதை அவர்கள் தற்போது மூலம் எதிர்மறை உணர்ச்சிகளை எளிதாக சமாளித்து விடுவார்கள்.
முடிவுகளை எடுக்க பழக்கப்படுத்துங்கள்:
உங்கள் குழந்தையை நீங்கள் மனரீதியாக வலிமையாக சிறு வயது முதலே அவர்களை சிறு சிறு முடிவுகளை எடுக்க அவர்களை பழக்கப்படுத்துங்கள். அதற்கான சுதந்திரத்தையும் அவர்களுக்கு கொடுங்கள். இதன் மூலம் அவர்கள் எப்பேர்ப்பட்ட சூழலையும் சுலபமாக கையாளுவார்கள்.
Mental strength in kids in tamil
தோல்வியை கையாளும் முறை:
தோல்வி என்பது நாம் அனைவரும் அடிக்கடி நம்முடைய வாழ்வில் சந்திக்கும் துரதிஷ்டமான விஷயங்களில் ஒன்று. உங்கள் குழந்தை தோல்வி அடையும்போது அல்லது அவர்கள் நிராகரிக்கும் போது அதை சமாளிப்பதற்கான வழிகளை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். முக்கியமாக இந்த சூழ்நிலையில் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள். சிறுவயதிலேயே இதை அவர்கள் கற்பதன் மூலம் எதிர்காலத்தில் இது போன்ற சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும் போது, விரக்தி அடையாமல் அதை அவர்கள் சுலபமாக சமாளித்து விடுவார்கள்.
இதையும் படிங்க: நீங்க எப்படிப்பட்ட பெற்றோர்? இந்த '5' விஷயங்களை வெச்சு தெரிஞ்சுக்கோங்க!!
Raising a resilient child in tamil
ஊக்குவிக்கவும்:
சிறுவயது முதலே உங்கள் குழந்தையை ஊக்குவிக்கவும். அதாவது நீங்கள் உங்கள் பிள்ளையை சிறு முயற்சிகளை ஊக்குவிக்கும் போது அவர்கள் மனதளவில் பலப்படுவார்கள். அதுமட்டுமின்றி, இதனுடன் எல்லையற்ற அன்பையும் அவர்களுக்கு கொடுங்கள்.
விருப்பமானதை செய்ய அனுமதி!
உங்கள் குழந்தையை நீங்கள் மனதளவில் வலிமையாக்க விரும்பினால் முதலில் அவர்கள் விரும்பியதை செய்ய அனுமதியுங்கள். மேலும் நீங்கள் அவர்களை கட்டுப்படுத்தும் போது அவர்கள் மனரீதியாக பலவீனமடைந்து விடுவார்கள்.