மழைக்காலத்தில் ஏற்படும் சளி , இருமலுக்கு நிவாரணம் தரும் தூதுவளை துவையல்...எப்படி செய்து அசத்துவது தெரியுமா..?

Published : Jul 24, 2022, 09:55 AM IST

Thoothuvalai Thuvaiyal: பருவகால சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவ உணவாக கருதப்படும் தூதுவளை துவையல், வீட்டில் எப்படி அரைத்து சாப்பிட்டுவது என்பதை தெரிந்து கொள்வோம்.

PREV
15
மழைக்காலத்தில் ஏற்படும் சளி , இருமலுக்கு நிவாரணம் தரும் தூதுவளை துவையல்...எப்படி செய்து அசத்துவது தெரியுமா..?
chutney

மழைக்காலம் துவங்கிவிட்டாலே, சளி, இருமல் போன்ற பிரச்சனை நம்மை பாடாய் படுத்த துவங்கிவிடும். இது  குழந்தைகள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும். ஜலதோஷம், மூக்கு ஒழுகுதல் மற்றும் உடல் வலிகள் போன்றவை பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன.  

25
chutney

இது போன்ற சூழ்நிலைகளில் நாம் ஆரோக்கியமான உணவுமுறைகளை உட்கொள்வது அவசியமான ஒன்றாகும். அவற்றில் ஒன்றுதான் தூதுவளை துவையல், வாரத்தில் ஒருமுறையேனும் இந்த துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் சளி , இருமல் இருக்கவே இருக்காதாம். எனவே, நாம் இந்த பதிவில் பருவகால சளி, இருமலுக்கு சிறந்த மருத்துவ உணவாக கருதப்படும் தூதுவளை துவையல், வீட்டில் எப்படி அரைத்து சாப்பிட்டுவது என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்..25 ஜூலை முதல் 31 ஜூலை 2022 வரை..இந்த ராசிகளுக்கு திடீர் பண வர இருக்கும்

35
chutney

தேவையான பொருள்கள்

தூதுவளை இலை - 2 கப்

புதினா - 1 கப்

பூண்டு - 4 பல்

எண்ணெய் - 3  டீஸ்பூன்

புளி -  சின்ன எலுமிச்சை அளவு

துருவிய தேங்காய் - 2 டீஸ்புன் 

உப்பு - தேவையான அளவு

இஞ்சி - 1/2 துண்டு

சிறிய வெங்காயம் - 10

சிவப்பு காய்ந்த மிளகாய் - 6

கடுகு -1 டீஸ்புன் 

பெருங்காயம் -1/4 டீஸ்புன் 

கறிவேப்பிலை -1 கொத்து 

மேலும் படிக்க....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்..25 ஜூலை முதல் 31 ஜூலை 2022 வரை..இந்த ராசிகளுக்கு திடீர் பண வர இருக்கும்

 

45
chutney

செய்முறை:

1. அடுப்பை பற்ற வைத்து, கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும், காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய், உரித்து வைத்த சிறிய வெங்காயம், பூண்டு, இஞ்சி போட்டு வதக்கவும். 

2. பின்பு அதனுடன் துருவிய தேங்காய் பூவை போட்டு வதக்கவும்.இறுதியாக அதனுடன் தூதுவளை இலை, புதினா இலை போட்டு வதக்கி 5 நிமிடம் ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும். 


 

55
chutney

3. மற்றொரு சின்ன கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்து வைத்த துவையலில் ஊற்றவும். சட்டினியாக வேண்டும் என்றால் தண்ணீர் கலக்கி கொள்ளலாம். இப்போது சுவையான, சளி, இருமலுக்கு உகந்த தூதுவளை துவையல் ரெடி.

மேலும் படிக்க....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்..25 ஜூலை முதல் 31 ஜூலை 2022 வரை..இந்த ராசிகளுக்கு திடீர் பண வர இருக்கும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories