செய்முறை விளக்கம்:
ஜவ்வரிசி ஒரு கப் எடுத்து நன்றாக அலசி, தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரமாவது ஊற வைத்து கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு கப் சர்க்கரையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பவுடராக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு பின்ச் அளவு குங்குமபூவை எடுத்து தண்ணீர் ஊற்றி கலந்து வைத்து கொள்ளுங்கள்.
இப்போது அடுப்பில் பாத்திரத்தை வைத்து விடுங்கள். இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரியை போட்டு நன்கு சிவக்க வறுத்து தனியே எடுத்து வைத்து விடுங்கள்.
பின்னர் அதே பேனில் தண்ணீர் வடித்து வைத்துள்ள ஜவ்வரிசியை போட்டு நன்றாக கிளறி விடுங்கள். அதன் பிறகு அரை கப் அளவு தண்ணீரை ஊற்றி ஜவ்வரிசியை 10 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.