Periods sex
பீரியட்ஸ் காலத்தில் உடலுறவு மேற்கொள்வதால் வழக்கத்தைக் காட்டிலும் அதிக திருப்தி ஏற்படுவதாக சொல்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல, மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் உடலுறவை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் உடல் பலவீனமாக இருக்கும் என்பதால், ஒய்வு தேவை. உடலுறவில் ஈடுபடுவது வலி மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே, மாதவிடாய் காலத்தில் உடலுறவில் கொள்வது நோய்தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பினை அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
Periods sex
மேலும் மாதவிடாய் என்பது பெண்கள் ஓய்வெடுக்க வேண்டிய நேரம், அதிக சுறுசுறுப்பாக இருக்கக்கூடாது, ஏனெனில் உடல் ஏற்கனவே சமநிலையின்மையில் உள்ளது. எனவே, மாதவிடாய் காலத்தில் நிம்மதியாக ஓய்வெடுப்பது நல்லது என்கின்றனர்.
Periods sex
ஒரு சிலருக்கு எவ்வளவு தான் காண்டம் பயன்படுத்தி மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபட்டாலும், பாலியல் நோய்கள் மற்றும் இதர நோய்த்தொற்றுகள் எளிதில் தொற்றக்கூடும். ஆகவே முடிந்த வரையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்கள்.
Periods sex
இருப்பினும், உடலுறவு வைத்து கொள்ள விரும்புபவர்கள், சில வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுங்கள்...
மாதவிடாய் காலத்தில் உடலுறவு மேற்கொள்வதானால் உங்கள் துணையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள்.
நீங்கள் மெத்தையின் மேல் ஏதேனும் துணி அல்லது ரப்பர் ஷீட் விரிப்புகளை பயன்படுத்துங்கள் அல்லது மெத்தையைப் பயன்படுத்தாமல் தரையில் மேற்கொள்ளலாம். இல்லையென்றால், நீங்கள் உங்கள் வீட்டு குளியலறையிலேயே உறவை வைத்துக் கொள்ளலாம்.
செக்ஸ் பொசிஷன்களை கையாளும்போது, உங்கள் மனைவிக்கு சவுகரியமாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஒருவேளை உறவில் அவருக்கு வலி ஏற்படுவதாக இருந்தால் தவிர்த்துவிடுவது நல்லது.
மேலும் படிக்க...பெண்களே! உறவில் நீங்கள் வேற லெவல் இன்பம் பெற..அந்த சமயத்தில் உங்கள் கணவன் காதில் இந்த வார்த்தையை சொன்னா போதும்