நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டும்...முருங்கைக் கீரையை இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..மிஸ் பண்ணிடாதீங்க...

Published : Jul 08, 2022, 10:41 AM IST

Murungai Keerai Poriyal: ஆரோக்கியமான உணவுகளில், ஒன்றான முருங்கைக் கீரை  நமது உடலுக்கு அதிக ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

PREV
16
நோய் எதிர்ப்புச் சக்தியை கூட்டும்...முருங்கைக் கீரையை இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்..மிஸ் பண்ணிடாதீங்க...
drumstick leaves

முருங்கை மரத்தின் தலை முதல் அடி வரை அனைத்தும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளித் தருகிறது. இந்த மரத்தின் காய்கள் மற்றும் இலைகள் இரண்டும் பரவலாக உட்கொள்ளப்படுகின்றன. காய்களை நாம் குழம்பு, பொரியல் வைக்க பயன்படுத்தலாம். அதன் இலைகளை ரசம், பொரியல், சூப் என பல உணவுகளை தயாரிக்கவும் பயன்படுத்தலாம். ஏழைகளுக்கு  ஊட்டச்சத்து வழங்கும் உணவு பொருட்களில் முருங்கைக் கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்,  இந்த முருங்கை கீரை பொரியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். 

மேலும் படிக்க....Cinnamon Tea: காலை எழுந்ததும் வெறும் வயிற்றில்...இந்த தண்ணீரை குடித்தால் நிகழும் அற்புதங்கள் பற்றி தெரியுமா..?

26
drumstick leaves

முருங்கை கீரையில் கிடைக்கும் நன்மைகள்:

1. முருங்கை கீரையில் வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், அத்தியாவசிய அமினோ அமிலங்கள், புரதங்கள் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

2. இதில் இருக்கும், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சில இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் இரத்தம் மற்றும் உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. 

மேலும் படிக்க....Cinnamon Tea: காலை எழுந்ததும் வெறும் வயிற்றில்...இந்த தண்ணீரை குடித்தால் நிகழும் அற்புதங்கள் பற்றி தெரியுமா..?

36
drumstick leaves

3. குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட  முருங்கை கீரை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

4. ஒரு கப் முருங்கை கீரையில் வாழைப்பழத்தை விட மூன்று மடங்கு அதிக பொட்டாசியம் உள்ளதாம். முருங்கை இலைகளில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட அதிகமாக உள்ளது. இதன் கால்சியம் செறிவு பாலை விட அதிகம் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

46
drumstick leaves

தேவையான பொருட்கள்: 

முருங்கை கீரை – 1 கப்

சின்ன வெங்காயம் – 15

உப்பு –தேவையான அளவு  

கடுகு – 1/4 டீஸ் ஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ் ஸ்பூன்

வர மிளகாய் – 3

தேங்காய் எண்ணெய் – 3 டீஸ் ஸ்பூன்

துருவிய தேங்காய் – 1/4 கப் 
 

 

56
drumstick leaves

செய்முறை விளக்கம்: 

1. முதலில் முருங்கை இலையைக் கழுவி வடிக்கட்டவும். அனைத்து தடிமனான கிளைகளையும் அகற்றவும். இப்போது, 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை எடுத்து, நசுக்கி அதனை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

2. முதலில் முருங்கை கீரை 1 கப் எடுத்து கழுவி வடிக்கட்டி கொள்ளவும். பிறகு அடுப்பில், கடாய் வைத்து 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/4 கப் தேங்காய் துருவல் சேர்த்து  பொன்னிறமாக வறுக்க வேண்டும். 

மேலும் படிக்க....Cinnamon Tea: காலை எழுந்ததும் வெறும் வயிற்றில்...இந்த தண்ணீரை குடித்தால் நிகழும் அற்புதங்கள் பற்றி தெரியுமா..?

66
drumstick leaves

3. பிறகு மற்றுமொரு கடாயில், 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்துநறுக்கிய  சின்ன வெங்காயம், தேவையான உப்பு சமற்றும் 2 வர மிளகாய் கிள்ளி போடவும். அவற்றை சிறுது நேரம் வதக்கிய பிறகு, அவற்றில் வடிகட்டிய முருங்கை கீரையை சேர்க்கவும். 

4. அவற்றை 5 நிமிடம் குறைந்த தீயில் வேக வைக்க வேண்டும். பிறகு, வறுத்த தேங்காய் துருவலை சேர்த்து 2 முதல் மூன்று நிமிடம் நன்கு கலக்கவும். அவ்வளவுதான் ருசியான முருங்கைக்கீரை பொரியல் தயார்.

5. இவற்றை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு பொருளாகும். மிஸ் பண்ணாதீங்க..இப்படி ஒருமுறை செய்து அசத்துங்க...

click me!

Recommended Stories