நுரையீரலுக்கு சிறந்தது:
இந்த பயிற்சி நுரையீரல் திறனை அதிகரிக்கவும், ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தவும் வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர். நுரையீரலில் ஆழமாக ஆக்சிஜனை பெறுவதன் மூலமாகவும், சளி மற்றும் பிற திரவங்களை வெளியேற்றுவதன் மூலமும், இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு வருவதன் மூலமாகவும் நம்மால் நுரையீரலின் திறனை அதிகரிக்க முடியும்.