Homemade Freshener: கெமிக்கல் ஸ்பிரேவுக்கு குட்பை! காசு இல்லாம வீடு கமகமன்னு மணக்க 3 மேஜிக் ட்ரிக்ஸ்!

Published : Jun 27, 2026, 08:46 PM IST

Homemade Freshener: வீடுகளில் கெமிக்கல் கலந்த ரூம் ஃபிரெஷ்னர்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக எலுமிச்சை, கிராம்பு, பட்டை, எசென்ஷியல் ஆயில் போன்றவற்றை வைத்து எப்படி மணக்க மணக்க ரூம் ஃபிரெஷ்னர் செய்வது என பார்ப்போம்.

PREV
14
வீட்டில் கெட்ட வாடை அடிக்கிறதா?

கோடை வெயில் காலம் மழைக்காலம் ஜில்லுனு இருந்தாலும், அது கூடவே சில பிரச்சனைகளையும் கொண்டு வரும். வீட்டில் ஈரப்பதம் அதிகமாகி, ஒருவித கெட்ட வாடை வர ஆரம்பிக்கும். மழைக்காலம் மட்டுமல்ல, சில வீடுகளில் குளிர்காலத்திலும் இதே பிரச்சனை இருக்கும். வீட்டில் வரும் ஈர வாடையை போக்க நீங்கள் கெமிக்கல் ஃபிரெஷ்னர்களைப் பயன்படுத்தினால், உடனே நிறுத்துங்கள். மிகக் குறைந்த செலவில், நீங்களே வீட்டில் இயற்கையான ரூம் ஃபிரெஷ்னரை எளிதாகத் தயாரிக்கலாம். இது நீண்ட நேரம் உங்கள் வீட்டை நறுமணத்துடன் வைத்திருக்கும்.

24
எலுமிச்சை மற்றும் கிராம்பு ஃபிரெஷ்னர்

ஒரு ஃப்ரெஷ்ஷான எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதில் 8 முதல் 10 கிராம்புகளைச் செருகி விடுங்கள். இதை உங்கள் ஹால், கிச்சன் அல்லது பெட்ரூமில் வையுங்கள். எலுமிச்சையின் புத்துணர்ச்சியும், கிராம்பின் நறுமணமும் சேர்ந்து ஈர வாடையை விரட்டிவிடும்.

34
பட்டை, ஆரஞ்சு தோல் ரூம் ஃபிரெஷ்னர்

ஒரு பாத்திரத்தில் இரண்டு அல்லது மூன்று பட்டைத் துண்டுகளைப் போட்டு தண்ணீரில் கொதிக்க வையுங்கள். அதனுடன் காய்ந்த அல்லது ஃப்ரெஷ்ஷான ஆரஞ்சு தோல் துண்டுகளையும் சேர்த்து கொதிக்க விடுங்கள். சுமார் 10-15 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டால் போதும், வீடு முழுவதும் நறுமணம் பரவி உங்களை ஃபிரெஷ் ஆக்கும்.

44
எசென்ஷியல் ஆயில்களைப் பயன்படுத்துங்கள்

லாவெண்டர், லெமன் கிராஸ் அல்லது புதினா போன்ற எசென்ஷியல் ஆயிலில் 8 முதல் 10 சொட்டுகளை ஒரு ஸ்பிரே பாட்டிலில் தண்ணீருடன் கலந்துகொள்ளுங்கள். இதை சோஃபா மீதும், அறையின் மூலைகளிலும் லேசாகத் தெளித்து விடுங்கள். இது நீண்ட நேரம் வீட்டுக்கு நல்ல மணத்தைக் கொடுக்கும். இந்த ஆயில்கள் அதிக விலை கொண்டவை அல்ல.

பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துங்கள்

ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைப் போட்டு, உங்களுக்குப் பிடித்த எசென்ஷியல் ஆயிலை சில சொட்டுகள் அதில் விடுங்கள். இதை அலமாரிகள், ஷூ ரேக்குகள் மற்றும் வாடை வரும் மற்ற இடங்களில் வைத்துவிட்டால் போதும், கெட்ட வாடையை அது உறிஞ்சிக்கொள்ளும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories