Crispy Dosa Tips: தோசை கல்லில் ஒட்டாமல், பிய்யாமல் ஹோட்டல் ஸ்டைலில் மொறுமொறுப்பாக வரணுமா? நம்ம பாட்டிமார்கள் பயன்படுத்திய இந்த சீக்ரெட் மாவு வகைகளை ட்ரை பண்ணி பாருங்க. இது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
தோசை கல்லில் மாவை ஊற்றி தேய்க்கும் போது பல நேரங்களில் தோசை பிய்ந்துவிடும். சரியான வட்ட வடிவம் கிடைக்காது. இதனால் நமக்கு சாப்பிடும் ஆசையே போய்விடும். ஆனால் இனிமேல் கவலையை விடுங்க, இதுக்கு ஒரு சூப்பர் தீர்வு இருக்கு. ஹோட்டல் ஸ்டைலில் தோசை எப்படி மொறுமொறுப்பாக சுடுவது என விரிவாக பார்ப்போம்.
25
இந்த சீக்ரெட் பொருளை சேருங்க
தோசை சூப்பராக வர நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். தோசை மாவில் வெறும் 1 ஸ்பூன் 'அரிசி மாவு' (Rice Flour) சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.
10 நிமிடம் அப்படியே விடுங்கள்
அரிசி மாவு கலந்த உடனே தோசை ஊற்ற வேண்டாம். மாவை குறைந்தது 10 நிமிடம் அப்படியே ஊற விடுங்கள். அப்போதுதான் மாவு நன்றாக செட்டாகி சரியான பதத்திற்கு வரும்.
35
பிய்யாத, மொறுமொறுப்பான தோசை ரெடி
வெறும் 1 ஸ்பூன் அரிசி மாவு சேர்ப்பதால், கல்லில் மாவை ஈஸியாக தேய்க்க முடியும். ஓரங்கள் பிய்யாமல் ஹோட்டல் ஸ்டைலில் தோசை செம கிரிஸ்பியாக வரும்.
தோசைக்கல்லின் பதம்
தோசைக்கல் ரொம்ப சூடாக இருக்கக் கூடாது. லேசாக தண்ணீர் தெளித்து துடைத்துவிட்டு, மாவை வட்டமாகத் தேயுங்கள். அரிசி மாவு இருப்பதால் தோசை எங்கும் ஒட்டாமல் ஈஸியாக வரும்.
ஹோட்டல்களில் மசால் தோசை கிரிஸ்பியாக இருக்க இதுதான் முக்கிய சீக்ரெட். மாவில் 1 முதல் 2 ஸ்பூன் சிறு ரவை சேர்த்து 10 நிமிடம் வைத்தால், தோசை ஆறிய பிறகும் நமத்துப் போகாமல் மொறுமொறுப்பாகவே இருக்கும்.
கடலை மாவு
மசால் தோசைக்கு அந்த அழகான பொன்னிறம் கிடைக்க கடலை மாவு உதவும். வெறும் 1 ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் மாவுக்கு நல்ல பிடிப்பு கிடைக்கும். தோசை பிய்யாது, வாசனையும் சூப்பராக இருக்கும்.
சோள மாவு
சமீபகாலமாக பலரும் பயன்படுத்தும் மாடர்ன் கிச்சன் ட்ரிக் இது. வெறும் 1 சின்ன ஸ்பூன் சோள மாவு சேர்த்தால், தோசை பேப்பர் ரோஸ்ட் மாதிரி கிரிஸ்பியாக வரும்.
55
மிக முக்கியமான டிப்ஸ் இதுதான்
மேலே சொன்ன எந்த மாவை பயன்படுத்தினாலும் 1 அல்லது 2 ஸ்பூன் அளவுக்கு மட்டுமே சேர்க்க வேண்டும். அதிகமாகப் போட்டால் தோசையின் ஒரிஜினல் சுவை மாறிவிடும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.