குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தயிர் சிக்கன் கிரேவி...நாக்கில் எச்சி ஊற வைக்கும் டேஸ்டில் எப்படி செய்வது..?

Published : Sep 11, 2022, 07:02 AM IST

Chicken with curd Gravy Recipe: குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான சுவையான ஈஸியான தயிர் சிக்கன் ரெசிபி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.  

PREV
14
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் தயிர் சிக்கன் கிரேவி...நாக்கில் எச்சி ஊற வைக்கும் டேஸ்டில் எப்படி செய்வது..?

வீட்டில் எப்போதும் ஒரு மாதிரியான சாப்பாடு செய்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். கொஞ்சம் வித்தியாசமாக குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, காரம் குறைவாக செய்து கொடுத்தால், நன்றாக தானே இருக்கும் . அப்படி ஒரு ஈஸியான  தயிர் சிக்கன் ரெசிபி இந்த பதிவில் பார்க்கலாம்.  

மேலும் படிக்க...Onion Thokku: ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாத வெங்காய தொக்கு ரெசிபி..சூப்பராக எப்படி தயார் செய்வது தெரியுமா..?

24

தேவையான பொருட்கள்: 

சிக்கன் – 1/2 கிலோ

இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் 

தயிர் – 150 கிராம்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

தனியாத்தூள் – 2 டீஸ்புன் 

தனி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

பிரியாணி மசாலா – 1/2 டீஸ்பூன்

தக்காளி – 1 

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு -தேவையான அளவு 

மேலும் படிக்க...Onion Thokku: ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாத வெங்காய தொக்கு ரெசிபி..சூப்பராக எப்படி தயார் செய்வது தெரியுமா..?

34

செய்முறை விளக்கம்:

1. முதலில் அரை கிலோ சிக்கன் நன்றாக கழுவி ஈரமில்லாத பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் . அதில் மஞ்சள் தூள்,  தனியாத்தூள்,  பிரியாணி மசாலா,  தயிர் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு பத்து நிமிடம் ஊற வைத்து விடுங்கள்.

2. பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றிய பிறகு கறிவேப்பிலை போட்டு தக்காளி சேர்த்து வதக்கி விடுங்கள். அதன் பிறகு ஊற வைத்திருக்கும் இந்த சிக்கன் தயிர் மசாலாவை அதில் சேர்த்து, வதக்கி விட வேண்டும்.

44

3. பின்னர், இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதன் மேல் ஒரு மூடி போட்டு, 10 நிமிடம் வேக வைத்து விடுங்கள்.  இப்போது, சுவையான தயிர் சிக்கன் கிரேவி தயார். மேலும், இதன் மேல் மல்லித்தழைகளை தூவி இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு பரிமாறலாம்.

4. உங்களுக்கு கிரேவி திக்காக வேண்டுமென்றால் தண்ணீரை சண்ட வைத்து கொள்ளுங்கள். கொஞ்சம் குழம்பு தேவை எனும் பட்சத்தில் ஓரளவுக்கு திக்காவதற்கு முன்பே அடுப்பை அணைத்து விடலாம்.

மேலும் படிக்க...Onion Thokku: ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாத வெங்காய தொக்கு ரெசிபி..சூப்பராக எப்படி தயார் செய்வது தெரியுமா..?

Read more Photos on
click me!

Recommended Stories