Summer Tips : ஏசி இல்லாமல் வீட்டை குளுகுளுன்னு வைக்க யாரும் சொல்லாத சூப்பர் டிப்ஸ்!

Published : Mar 03, 2025, 11:16 AM IST

Summer House Cooling Tips : கோடை காலத்தில் உங்களது வீட்டை ஏசி இல்லாமல் குளிர்ச்சியாக வைத்திருக்க சில வழிகள் இங்கே.

PREV
15
Summer Tips : ஏசி இல்லாமல் வீட்டை குளுகுளுன்னு வைக்க யாரும் சொல்லாத சூப்பர் டிப்ஸ்!
Summer Tips : ஏசி இல்லாமல் வீட்டை குளுகுளுன்னு வைக்க யாரும் சொல்லாத சூப்பர் டிப்ஸ்!

கோடை காலம் தொடங்கும் போது. கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக நாம் கூலர் அல்லது ஏசியை பயன்படுத்துகிறோம். ஆனால் ஏசி பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமன்றி, ஏசியை அதிகமாக பயன்படுத்தினால் மின்சார கட்டணம் தான் அதிகமாகும். இதனால் முழு பட்ஜெட்டும் பாழாகிவிடும். அதுபோல, வெப்பம் அதிகரிக்கும் போது மின்சார பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். மின்சாரம் இருக்கும் வரை ஏசி அல்லது கூலர் வைத்து வெப்பத்தை நாம் தணிக்க முடியும். அதுவே மின்சாரம் இல்லாத சமயத்தில் மாற்று தீர்வுகளை கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளது. 

25
கோடையில் ஏசி இல்லாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி?

இத்தகைய சூழ்நிலையில், கோடை காலத்தில் ஏசி அல்லது கூலர் இல்லாமல் வீட்டை குளிர்ச்சியாக வைத்திருக்க என்ன செய்வதென்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், உங்களுக்காக சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன அவற்றை மற்றும் பின்பற்றினால் போதும். ஏசி அல்லது கூலர் இல்லாமல் உங்களது வீட்டை கோடையில் காலத்தில் குளுகுளுவென்று வைத்திருக்க முடியும். அவை என்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.

35
வீட்டின் வண்ணங்கள்:

கோடை காலத்திற்கு ஏற்ப பெயிண்ட் சந்தையில் கிடைக்கின்றன. வெயில் காலத்தில் வீட்டில் வெப்பம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் வீட்டில் அடித்திருக்கும் பெயிண்டின் நிறம் தான். ஆம், கோடை காலத்தில் வீட்டிற்கு உள்ளே டார்க் பெயிண்ட்டை விட லைட் நிறத்தில் இருக்கும் பெயிண்ட் தான் பெஸ்ட். அடர்த்தியான நிறம் வீட்டில் சூட்டை அதிகரிக்கும். எனவே பிங்க், வெளிர் பச்சை போன்ற மெல்லிய வண்ணங்களை வீட்டிற்குள் அடித்தால் குளிர்ச்சியாக இருக்கும்.

திரைசீலைகள்:

கோடை காலத்தில் வீட்டிற்குள் அனல் காற்று வருவதை தடுக்க ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி அவற்றிற்கு வெளியே அடர் நிறத்தில் காட்டன் திரை சிலைகளை போடுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிங்க:  வெயிலில் புழுக்கம் இல்லாம கிச்சன் குளுகுளுனு மாறனுமா? சூப்பர் டிப்ஸ்!!

45
குளிர்ச்சி தரும் இயற்கை திரை தடுப்புகள்:

வெட்டிவேர் பனை ஓலை போன்றவற்றல் செய்யப்பட்ட திரைகளை வீட்டின் பால்கனி மற்றும் ஜன்னல்களில் தொங்க விட்டால் வீட்டிற்குள் குளிர்ச்சியாக இருக்கும். அதுமட்டுமின்றி இது வீட்டிற்கு கூடுதல் அழகையும் கொடுக்கும். மேலும் மாடியில் தென்னை ஓலை மற்றும் சாக்கு பைகளை தண்ணீரில் நனைத்து போட்டு வைக்கலாம் .பண வசதி உள்ளவர்கள் மாடியில் பந்தல் கூட போடலாம். முக்கியமாக வீட்டில் மாடித்தோட்டம் இருந்தால் வீட்டில் வெயில் இறங்காமல், வீட்டை குளிர்ச்சியாக வைக்கும்.

உட்புற தாவரங்கள்:

கோடை காலத்தில் வீட்டில் குளிர்ச்சி தங்க உட்புற தாவரங்களை வாங்கி வைக்கவும். இவை வீட்டிற்கு குளிர்ச்சியை தருவது மட்டுமின்றி அழகும் சேர்க்கும். கோடை வெப்பத்தை தணிக்க உட்புற தாவரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதையும் படிங்க:  Beauty Tips : கோடையில் சருமம் குளு குளுனு இருக்க சூப்பரான ஃபேஸ் பேக்..! இப்பவே செய்ங்க..

55
குளிர்விளக்குகள்:

சந்தையில் பல குளிர்விளக்குகள் விற்பனையாகின்றன. அவற்றை இந்த கோடையில் நீங்கள் வாங்கி பயன்படுத்துங்கள் வீட்டில் வெப்பம் தாங்காது மற்றும் இவை அறையின் வெப்பநிலையையும் குறைக்கும். முக்கியமாக இதை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களது வீட்டில் டிவி கம்ப்யூட்டர் போன்றவற்றை உபயோகிக்காமல் இருப்பதுதான் நல்லது. மேலும் தேவையில்லாத சமயத்தில் அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விடுங்கள். 

இரவில் ஜன்னல்களைத் திறந்து வைக்கவும்

இரவில் வீட்டின் ஜன்னல்களை திறந்து வையுங்கள் மேலும் ஜன்னல் பக்கமாக டேபிள் பேனை வைக்கவும். இது அறைக்குள் இயற்கையான காற்றைக் கொண்டுவரும்.

குறிப்பு : மேலே சொன்ன எல்லாவற்றையும் விட கோடையில் பருத்தி ஆடைகளை உடுத்துங்கள், நிறைய தண்ணீர் குடியுங்கள், குளிர்ச்சியான பழங்கள், மோர் மற்றும் வெள்ளரிகளை சாப்பிடுங்கள். ஏனெனில் இவை கோடையிலும் நம்மை குளிர்ச்சியாக வைக்க உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories