
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இருக்கும் கரோட்டினாய்டு என்னும் கலவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் பி6 இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இது சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் இருக்கும் இனிப்பு சுவை காரணமாக தான் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவது ரொம்பவே நல்லது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவார்கள். இதன் சுவை காரணமாக பலர் அதிக அளவில் இதை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவார்கள். ஆனால் அவற்றின் தரம் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் சில சமயங்களில் அவை கெட்டுப் போய் இருக்கும். எனவே இந்த பதிவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு நீங்கள் வாங்கும் போது என்னென்ன விஷயங்களை பார்க்க வேண்டும் மற்றும் அவை பிரஷ்ஷாக இருக்கிறதா.. இல்லையா? என்பதை எவ்வாறு சரி பார்க்கலாம் என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு வாங்கும் போது முதலில் அவற்றின் அளவை சரி பார்ப்பது ரொம்பவே முக்கியம். ஏனெனில் சிறிய மெல்லிய உருளைக்கிழங்கு இனிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் கடையில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு வாங்கும்போது நடுத்தர அளவிலான கிழங்கை வாங்குவதுதான் நல்லது. பெரிய அளவு பார்ப்பதற்கு நன்றாக தோன்றலாம். ஆனால் சாப்பிடும் போது சுவையற்றதாக இருக்கும். எனவே நடுத்தர அளவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வாங்கி சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்காம்! தினமும் கூட சாப்பிடலாம்!
சர்க்கரைவள்ளிக் கிழங்கு வாங்கும் போது முதலில் அதன் வாசனையை சரி பார்க்கவும். ஏனெனில் புதிதாக இருக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு ஒரு இனிமையான மணத்தைக் கொண்டிருக்கும். ஒருவேளை சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்து துர்நாற்றம் வீசினாலோ அல்லது விரும்பத்தகாத வாசனை வந்தாலோ அவற்றை வாங்க வேண்டாம். அது நல்ல கிழங்கு அல்ல என்பதற்கான அர்த்தம்.
இதையும் படிங்க: சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடால் 'சுகர்' உடனே அதிகமாகுமா? எப்படி சாப்பிடனும்
உங்கள் கைகளால் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அழுத்திப் பார்க்கவும். கெட்ட கிழக்கானது மென்மையாக இருக்கும். அதுவே நல்ல கிழங்கு உறுதியாக இருக்கும். எனவே, நீங்கள் வாங்கும் போது எப்போதும் உறுதியாக இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை மட்டும் வாங்கி சாப்பிடுங்கள்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள புள்ளிகளை கவனியுங்கள். ஏனெனில் புள்ளிகள் கொண்ட கிழங்கு வாங்குவது நல்லது என்பதற்கான அறிகுறியாகும். வெளியே பார்க்க நன்றாக இருந்தாலும், சுவை மோசமாக இருக்கும். மேலும் இதுபோன்ற சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவது நோய்க்கு வழிவகுக்கும்.