போலியான முந்திரிப் பருப்பை கண்டுபிடிக்க 'இப்படி' பண்ணா போதும்!!

First Published Oct 7, 2024, 6:25 PM IST

Spotting Fake Cashew Nuts :  போலியான முந்திரிப்பருப்பை கண்டுபிடிப்பது எப்படி என்றும், தரமான முந்திரிப்பருப்பை வாங்குவது எப்படி என்றும் இந்த பதிவில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Fake Cashew Nuts Detection In Tamil

முந்திரிப் பருப்பு நட்ஸ் வகைகளில் ஒன்றாகும். இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது இது நம் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்குகின்றது இதை பலரும் ஸ்நாக்ஸ் போல விரும்பி சாப்பிடுவார்கள். சில இதை வறுத்தோ, இன்னும் சிலர் இதை இனிப்புகள் அல்லது சமையல்களில் சேர்த்து சாப்பிடுகிறார்கள்.

இப்போதெல்லாம் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்கும் முந்திரி பருப்பானது சீக்கிரமே கெட்டுப் போய் விடுகிறது அல்லது அதன் சுவையில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் பணம் வீணாவது தான் மிச்சம். அதிலும் குறிப்பாக சில இடங்களில் தரம் குறைந்த போலியான முந்திரிகள் ஏராளமாக விற்பனை செய்யும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது. ஆகவே நீங்கள் வாங்கும் முந்திரி பருப்பு போலியானது என்று கண்டுபிடிப்பது எப்படி என்றும், தரமான முந்திரிப்பருப்பை வாங்குவது எப்படி என்றும் இந்த பதிவில் நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

போலியான முந்திரிப்பருப்பை கண்டுபிடிப்பது எப்படி?

1. நிறம் : நீங்கள் வாங்கும் முந்திரி பருப்பு நிறம் சற்று மஞ்சள் நிறமாக இருந்தால் அது போலி என்று அர்த்தம். ஏனெனில் நல்ல முந்திரி எப்போதும் வெள்ளையாக மட்டுமே இருக்கும் மேலும் அதன் சுவையும் சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதுபோல முந்திரியின் மேல் கறைகள், கருமை அல்லது துளைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை ஒருபோதும் வாங்காதீர்கள்.

2. வாசனை : நீங்கள் முந்திரி வாங்கும் போது அதை நுகர்ந்து பார்த்து வாங்குங்கள். முந்திரியில் இருந்து லேசான வாசனை வந்தால் அது தரமான முந்திரி என்று அர்த்தம் அதுவே அதிலிருந்து என்னை வாசனை வந்தால் அது போலி முந்திரியாகும்.

Latest Videos


Fake Cashew Nuts Detection In Tamil

3. அளவு : முந்திரி வாங்கும் போது அதன் நீளம் ஒரு அங்குலமாகவும், கொஞ்சம் தடிமனாகவும் இருந்தால் அது தரமான முந்திரி ஆகும். அதுவே சற்று பெரியதாகவோ அல்லது மிகவும் சிறியதாகவோ இருந்தால் அது போலியானது. அதுபோல முந்திரி ரொம்பவே கெட்டியாக இருந்தால் வாங்க வேண்டாம்.

4. விலை : பொதுவாக தரமான முந்திரியின் விலை எப்போதும் அதிகமாகவே இருக்கும். மேலும் அது அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது. அதே சமயம் போலியான முந்திரி பருப்பு சீக்கிரமே கெட்டுப் போய்விடும் அதில் பூச்சிகள் கூட வந்துவிடும். அதன் சுவையும் மோசமாக இருக்கும்.

இதையும் படிங்க:  Benefits of Cashews: முந்திரி சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்குமா? வாங்க தெரிஞ்சிகலாம்..!!

Fake Cashew Nuts Detection In Tamil

5. சுவை : தரமான முந்திரியானது சாப்பிடும் போது பற்களில் ஒட்டவே ஒட்டாது ஆனால் கோழி முந்திரியானது பற்களில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

குறிப்பு :

மேலே சொன்ன விஷயங்கள் படி நீங்கள் கடைகளில் முந்திரி வாங்கும் போது பார்த்து தரமானதாக வாங்குங்கள். தரமான முந்திரிகளை வாங்கி சாப்பிடும் போது அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம். முந்திரி உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்.

இதையும் படிங்க: ருசியான சுவையில் 'முந்திரிக் குழம்பு' இப்படி செய்ங்க வீடே மணக்கும்..ரெசிபி இதோ..!!

click me!