அடுத்ததாக, புதினா செடியை நல்ல வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைத்து பராமரியுங்கள். புதிய பச்சைத் தளிர்கள் வளர ஆரம்பித்ததும் இன்னொரு சூப்பர் ட்ரிக் இருக்கு. தளிர்களின் நுனிப்பகுதியை அவ்வப்போது மெதுவாகக் கிள்ளிவிடுங்கள். இதனால் பக்கவாட்டில் புதிய கிளைகள் உருவாகத் தூண்டப்பட்டு, புதினா செடி நீளமாக மட்டும் வளராமல் அடர்த்தியாக புதர் போல வளர உதவும்.
அறுவடை செய்யும்போதும் ஒரு சின்ன ட்ரிக்
புதினா வளர்ந்ததும் இலைகளை மட்டும் பறிச்சுட்டு இருக்கீங்களா? அதற்கு பதிலாக இந்த சின்ன ட்ரிக்கை ட்ரை பண்ணிப் பாருங்க, மீண்டும் கிளைகள் வர உதவும்.
சமையலுக்கு புதினா தேவைப்படும்போது ஒவ்வொரு இலையாகப் பறிப்பதற்குப் பதிலாக, இலைகள் முளைக்கும் கணு (node) பகுதிக்கு சற்று மேலே தண்டுடன் சேர்த்து வெட்டி எடுங்கள். இப்படி வெட்டுவது அந்தப் பகுதியில் இருந்து பக்கக் கிளைகள் உருவாகி, செடி மீண்டும் அடர்த்தியாக வளர உதவும்.
ஆனால் ஒரே தடவையில் செடி முழுவதையும் வெட்டி எடுக்காதீங்க. தேவைக்கு ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக அறுவடை செய்வதுதான் சூப்பர் ட்ரிக். இதனால் செடியில் போதுமான இலைகள் எஞ்சியிருக்கும். மீண்டும் புதிய தளிர்களும் கிளைகளும் வளர அவகாசம் கிடைக்கும்.
அதனால் புதினாவை வளர்ப்பது மட்டுமல்ல, எப்படி பறிக்கிறோம் என்பதிலும் கவனம் செலுத்தினால், ஒரே செடியிலிருந்து தொடர்ந்து ஃப்ரெஷ் புதினாவைப் பெறலாம்.
இப்படி கொஞ்சம் கவனத்துடன் பராமரித்தாலே, சமையலுக்கு புதினா தேவைப்படும் போதெல்லாம் கடைக்கு ஓடாமல் வீட்டுத் தொட்டியிலிருந்தே தேவையான நேரத்தில் ஃப்ரெஷ்ஷாகப் பறித்துப் பயன்படுத்தலாம்.