எலி தொல்லை தாங்கலயா? வெறும் வெங்காயத்த வச்சி எலியை விரட்டும் சூப்பர் டிப்ஸ்!!
வீட்டில் எலி தொல்லை அதிகமாகி விட்டால், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அவற்றை விரட்டுவது எப்படி என்று இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் எலி தொல்லை அதிகமாகி விட்டால், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து அவற்றை விரட்டுவது எப்படி என்று இந்த பதிவை தெரிந்து கொள்ளலாம்.
Natural Ways to Get Rid of Rats from Your Home : வீட்டில் எலி இருப்பது ஒரு பெரிய பிரச்சனையாகும். எலி தொல்லையால் நிறைய நோய்களும் நமக்கு பரவுகின்றன. எனவே அவற்றை வீட்டில் இருந்து விரட்டி அடிப்பது மிகவும் அவசியம். இதற்காக நாம் பலவிதமான மருந்துகள் மற்றும் எலிபொறி வாங்கி பயன்படுத்தியிருப்போம். ஆனால் எலி நமக்கே டிமிக்கி கொடுத்து ஓடிவிடும். இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகள் இருக்கும் வீட்டில் எலி இருந்தால் ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகள் விளையாடும் பொருட்கள் எலி வாய் வைத்தாலோ அல்லது கடித்தாலோ குழந்தைகள் அதை மீண்டும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது இதனால் குழந்தைகளுக்கு தான் தொற்று நோய்கள் பரவும். எனவே, வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து வீட்டிலிருந்து எலிகளை சுலபமாக விரட்டுவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
- வீட்டில் உணவுப் பொருட்களை ஆங்காங்கே போட்டால் அவை எலிகளை சுண்டி இழுக்கும்.
- மழைக்காலத்தில் வீட்டிற்கு வெளியே கழிவு நீர் தேங்கி இருந்தால், சாக்கடை கழிவுகள் குழாய் வழியாக வீட்டிற்குள் எலிகள் எளிதாக வந்துவிடும்.
- குளிர்காலத்தில் எலிகளுக்கு கதகதப்பு தேவைப்படுவதால், அவை வீட்டிற்குள் வரும்.
- எலிகளுக்கு குப்பைகள் மற்றும் இருண்ட இடம் பிடிக்கும் என்பதால், வீட்டை எப்போதுமே சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: வீட்டில் எலி தொல்லையா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க; ஓடிவிடும்!
எலிகளுக்கு புதினா எண்ணெயில் இருந்து வரும் வாசனை பிடிக்காது. எனவே உங்களது வீட்டின் மூளை முடுக்குகளில் புதனை எண்ணெயை தெளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் எலி வீட்டில் இருந்து ஓடிப் போய்விடும்.
வெங்காயம்: வெங்காயத்திலிருந்து ஒரு விதமான நெடிய மணம் வரும். எலிகளுக்கு அது பிடிக்காது. எனவே எலிகள் இருக்கும் இடத்திலோ அல்லது வரும் இடத்திலோ வெங்காயத்தை நறுக்கி வைக்க வேண்டும். இதனால் எலி வீட்டிற்குள் இருந்தாலும் ஓடிவிடும் மீண்டும் வரவே வராது. வெங்காயம் சீக்கிரமே அழுகி போனால் பிறகு மீண்டும் புதிய வெங்காயத்தை மாற்ற வேண்டும்.
இதையும் படிங்க: வீட்டில் 'எலிகள்' அட்டகாசமா? 1 ஸ்பூன் வத்தல் பொடியில் ஓட ஓட விரட்டலாம்!!
மிளகு பொடி எல்லோர் வீட்டின் சமையலறையில் கண்டிப்பாக இருக்கும் மசாலா பொருள். இது எலியை விரட்டி அடிக்க உதவும். இதை உங்களது வீட்டின் மூளை முடுக்குகளில் தூவி விடுங்கள். அதிலிருந்து வரும் நெடிய மணம் எலியை விரட்டியடிக்கும்.
பூண்டு: பூண்டை உரித்து நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள் இப்போது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நசுக்கிய பூண்டை போட்டு அந்த கிண்ணத்தை எலி இருக்கும் இடத்தில் அல்லது வரும் இடத்தில் வைக்க வேண்டும். பூண்டிலிருந்து வரும் வாசனை எலிகளுக்கு பிடிக்காது என்பதால் எலி ஓடிவிடும்.
எலிகளுக்கு கிராம்பு எண்ணெயில் இருந்து வரும் வாசனை பிடிக்காது. எனவே எலி பொந்தில் ஒரு துளி கிராம்பு ஊற்றி விடுங்கள் அல்லது தெளிக்க வேண்டும். இதனால் எலி அங்கிருந்து ஓடிவிடும்.
பிரியாணி இலை : பிரியாணி இலிருந்து வரும் நெடிய மணம் எலிகளுக்கு பிடிக்காது என்பதால், அதை எலிகள் இருக்கும் இடத்தில் வைத்தால் அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே எலிகள் இறந்து விடும். அதுபோல எலிகள் வரும் இடத்திலும் 2-3 பிரியாணி இலைகளை போட்டு வையுகள்.