Kadaai Paneer : வடநாட்டு ஸ்டைலில் ருசியான ''கடாய் பன்னீர் கிரேவி''

First Published Sep 12, 2022, 5:39 PM IST

வாங்க, கடாய் பன்னீரை எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
 

Kadai panner

குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. இவற்றில் தான் கால்சியம் ஊட்டச்சத்து அதிகம் காணப்படுகிறது. அதிலும் குழந்தைகள் பால் பொருட்களாத பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய பன்னீரை இரவில் கிரேவி போன்று செய்து சப்பாத்தி, தோசை இட்டி போன்றவையுடன் கொடுத்தால் விரும்பி தொல்லை செய்யாமல் சாப்பிடுவார்கள்.

வாங்க, கடாய் பன்னீரை எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

Kadai panner

தேவையான பொருட்கள்

200 கிராம் பண்ணீர்

ஒரு வெங்காயம் (நறுக்கியது)

இரு தக்காளி (நறுக்கியது)

ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்

ஒரு ஸ்பூன் மல்லித்தூள்

ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்

தேவையான அளவு உப்பு

தாளிக்க தேவைப்படும் பொருட்கள்

3 ஸ்பூன் எண்ணெய்

ஒரு ஸ்பூன் சோம்பு

4 கிராம்பு

ஒரு பட்டை

4 பல் பூண்டு

ஒரு பச்சை மிளகாய் (நீளமாக கீறியது)

Kadai panner

செய்முறை

முதலில், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பன்னீரை சிறுசிறு துண்டுகளாக்கி, சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு, ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும், தாளிப்பதற்கு தேவையான பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும்.

பின்னர், அதில் வெங்காயத்தைப் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி, பின் தக்காளியையும் சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

பிறகு, அதில் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து, உப்பை தூவி சிறிது நேரம் கிளறி விட வேண்டும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து எண்ணெய் தனித்தனியாக பிரியும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

Chappathi With Kuruma : சப்பாத்திக்கு ஒரு புதுவித சைட் டிஸ் ''காலிப்ளவர் பட்டாணி குருமா''!

இறுதியாக அதில் நறுக்கி வைத்த பன்னீர் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, இரண்டு நிமிடம் வரை வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால் ருசியான கடாய் பன்னீர் ரெடி!

click me!