Published : Nov 04, 2024, 09:40 AM ISTUpdated : Nov 04, 2024, 09:46 AM IST
Toilet Cleaning Tips : தீபாவளிக்கு பிறகு உங்கள் வீட்டின் டாய்லெட் ரொம்பவே மோசமாக இருந்தால், வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அவற்றை நொடியில் சுத்தம் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை நாளில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு வந்திருப்பார்கள். இதனால் டாய்லெட் ரொம்பவே மோசமாக இருக்கும். குறிப்பாக கழிவறையில் பாக்டீரியாக்களின் அதிகரிப்பால், மஞ்சள் கறை படிந்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். எனவே இவற்றை சுத்தம் செய்வது அவசியம்.
24
Toilet Cleaning Tips In Tamil
ஆனால் தீபாவளி கொண்டாட்டத்தால் ஏற்பட்ட சோர்வால் அவற்றை சுத்தம் செய்ய சிரமப்படுகிறீர்களா? எனவே உங்கள் வீட்டில் இருக்கும் டாய்லெட் மிகவும் எளிதாக சுத்தம் செய்ய நீங்கள் விரும்பினால், கடைகளில் விலை கொடுத்து பொருட்களை வாங்குவதற்கு பதிலாக, சமையலறையில் இருக்கும் சில பொருட்களை வைத்து கிளீனர் தயாரிக்கலாம். அதன் மூலம் உங்களது டாய்லெட் நொடியில் சுத்தம் செய்து விடலாம். இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.
சமையல் சோடா
எலுமிச்சை சாறு
டிஷ் வாஷ்
அத்தியாவாசி எண்ணெய்
கிளீனர் தயாரிக்கும் முறை:
வீட்டிலேயேகழிப்பறையை சுத்தம் செய்வதற்கான கிளீனரை தயாரிக்க, முதலில் ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் 1 எலுமிச்சை பழத்தின் சாற்றை புளிந்து கொள்ளுங்கள். பின் 1 ஸ்பூன் டிஷ் வாஷ் மற்றும் 5 துளிகள் அத்தியாவாசி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவுதான் கிளீனர் தயார்.
44
Toilet Cleaning Tips In Tamil
இப்படி சுத்தம் செய்
உங்கள் வீட்டின் டாய்லெட்டை சுத்தம் செய்ய முதலில் இருக்கையில் தண்ணீர் ஊற்றவும். இப்போது தயாரிக்கப்பட்ட டாய்லெட் கிளினரை டாய்லெட் சீட்டில் எல்லா இடங்களிலும் ஊற்றவும். மேலும் சிறிது நேரம் அப்படியே வைத்து விடுங்கள் அதன் பிறகு ஒரு துருகியின் உதவியுடன் நன்கு சுத்தம் செய்யுங்கள். இறுதியாக தண்ணீரால் நன்கு சுத்தம் செய்யவும். இப்போது உங்கள் வீட்டின் டாய்லெட் பார்ப்பதற்கு புதிதாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.