Silver Jewellery : வெள்ளி நகைகள் நாளடைவில் கருத்துப் போவது இயல்பு. ஆனால், பாலிஷ் போடாமலேயே வீட்டிலுள்ள கிச்சன் பொருட்களை வைத்து 5 நிமிடத்தில் புதுசு மாதிரி ஜொலிக்க வைக்கலாம். கெமிக்கல் செலவும் தேவையில்லை!
உங்க வெள்ளி செயின், மோதிரம், கொலுசு எல்லாம் கருத்துப் போச்சா? இனிமேல் கெமிக்கல், பாலிஷ்னு காசு செலவு செய்ய வேண்டாம். கிச்சன்ல இருக்குற ரெண்டே பொருட்களை வைத்து, வெறும் 5 நிமிஷத்துல வெள்ளி நகைகளை புதுசு மாதிரி பளபளன்னு ஜொலிக்க வைக்கலாம்!
ஒரு பாத்திரத்துக்குள் அலுமினியம் ஃபாயிலை விரித்து வையுங்கள். ஃபாயிலின் பளபளப்பான பக்கம் மேலே இருக்க வேண்டும்.
கருத்துப்போன வெள்ளி நகைகளை ஃபாயிலின் மேல் வையுங்கள். நகைகள் ஃபாயிலைத் தொட்டுக்கொண்டிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
நகைகளின் மீது பேக்கிங் சோடா மற்றும் உப்பைச் சமமாகத் தூவுங்கள்.
இப்போது கொதிக்கும் சுடுநீரை மிகவும் கவனமாக ஊற்றுங்கள். நகைகள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும்.
சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே ஊறவிடுங்கள். அலுமினியம் ஃபாயில், பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றுடன் ஏற்படும் வேதியியல் எதிர்வினை, வெள்ளி நகைகளில் படிந்திருக்கும் கறுப்புப் படலத்தை தளர்த்தி நீக்க உதவும்.
இறுதியாக, நகைகளை கவனமாக எடுத்து சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவுங்கள். பின்னர் மென்மையான துணியால் ஈரம் இல்லாமல் துடைத்து உலர்த்துங்கள். இப்போது உங்கள் வெள்ளி நகைகள் மீண்டும் பளபளப்பாகத் தெரியும்!
இந்த சிம்பிளான, நேச்சுரல் முறையில உங்க வெள்ளி நகைகள் மறுபடியும் பளபளக்கும். எந்தப் பக்க விளைவும் இல்லாம, நகையோட அழகை அதிகரிக்க இது ஒரு சூப்பரான வீட்டு வைத்தியம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.