இரும்பு தோசை கல் துருப்பிடித்திருக்கும். மேலும், அதன் வழவழப்பு தன்மை குறைந்து தோசை சுத்தமாக தோசை சுட வராது. அதற்கு உங்கள் வீட்டில் மண் அகல் விளக்கை எடுத்துக்கொண்டு, சூடான தோசைக் கல்லில், கரி இருக்கும் இடத்தில் தேய்க்க வேண்டும். இப்படி செய்தால், மொத்த கரியும் துருவும், தூள் தூளாக பேத்துக் கொண்டு வந்துவிடும். இறுதியாக, ஒரு ஸ்டீல் ஸ்க்ரப்பர் நாரை போட்டு, பாத்திரம் தேய்க்கும் சபீனா பவுடரை போட்டு, நன்றாக தேய்த்து, சுத்தப்படுத்தி விடுங்கள்.