
இப்போதெல்லாம் நம்ம சாப்பிடற பல பொருட்கள் கலப்படமாக வருகிறது. கலப்பட உணவுகளை சாப்பிட்டு தேவையில்லாத நோய்கள் வருகிறது. பன்னீர், நெய், மாவு போன்ற உணவுப் பொருட்களில் கலப்படம் இருக்கும். தரமும் குறைவாக இருக்கும்.
கலப்பட எண்ணெய்கள், மாவு, மசாலா பொருட்கள் இப்படி நாம் பயன்படுத்தற எல்லாமே கலப்படம் ஆகுது. ஆனா இதையெல்லாம் கண்டுபிடிச்சு அப்படிப்பட்ட பொருட்களை வாங்காம இருக்கணும்.
நிறைய பேர் சோள மாவு விட கோதுமை மாவைத்தான் அதிகமா பயன்படுத்துவாங்க. தினமும் கோதுமை ரொட்டிகளை சாப்பிடுறவங்க இருக்காங்க. ஆனா கோதுமை மாவும் கலப்படம் ஆகுது. ஆனா கலப்பட கோதுமை மாவு உங்களுக்கு நிறைய உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துது. அதனால கலப்பட கோதுமை மாவை எப்படி கண்டுபிடிக்கறதுன்னு இப்போ தெரிஞ்சுக்கலாம் வாங்க.
மாவுல கலப்படம் இருக்கா இல்லையான்னு லேப் டெஸ்ட் மூலமா தெரிஞ்சுக்கலாம். ஆனா இதுக்காக நீங்க லேபுக்கே போகணும்னு அவசியம் இல்ல. வீட்டுல இருந்தே செய்யலாம். இதுக்காக நீங்க ஒரு டெஸ்ட் டியூப் எடுத்துக்கோங்க. இதுல கொஞ்சம் கோதுமை மாவு போடுங்க. இதுல ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை கலந்து விடுங்க.
இந்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை கலக்குறது மூலமா அது கலப்படம் ஆனதா? இல்லையா?ன்னு எளிதா தெரிஞ்சுடும். இதுல ஏதாவது வடிகட்டி பொருள் இருந்தா, அதுல சுண்ணாம்பு கலந்திருக்குன்னு அர்த்தம். நீங்க செக் பண்றதுக்காக மெடிக்கல் ஸ்டோர்ல இருந்து ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை வாங்கிக்கோங்க. இதுல எதுவும் தெரியலனா அந்த மாவு கலப்படம் இல்லன்னு அர்த்தம்.
கோதுமை மாவு கலப்படமா? இல்லையா?ன்னு அதோட மணத்தை வச்சு சொல்லிடலாம். ஏன்னா சுத்தமான மாவு மணமா, லேசா இனிப்பா இருக்கும். இந்த மாவு வித்தியாசமா மணம் வந்தா அது கலப்படம் ஆனதுன்னு அர்த்தம். அதனால மாவு வாங்கும்போதே அதோட மணத்தை பாருங்க.
தண்ணீர்ல செக் பண்ணுங்க:
கோதுமை மாவுல கலப்படம் இருக்கா? இல்லையா? அப்படிங்கறத நீங்க தண்ணீர் மூலமாவும் ரொம்ப எளிதா தெரிஞ்சுக்கலாம். இதுக்காக ஒரு டம்ளர்ல தண்ணீர் எடுத்துட்டு அதுல அரை டீஸ்பூன் மாவு போட்டு கலக்குங்க.
இந்த தண்ணீர்ல ஏதாவது மிதக்குதுன்னா அது கலப்படம் ஆனதுன்னு அர்த்தம். ஏன்னா மாவுல கலப்படம் இல்லனா தண்ணீர்ல எதுவும் மிதக்காது. கலப்படமான மாவை பயன்படுத்தக்கூடாது.
காகிதத்தால டெஸ்ட் பண்ணுங்க
நீங்க காகிதத்தாலயும் ரொம்ப ஈஸியா செக் பண்ணிக்கலாம். இதுக்காக நீங்க பெருசா எதுவும் செய்ய வேண்டியதில்ல. ஒரு காகிதத்துல கொஞ்சம் மாவு வைங்க. இதை எரிங்க. சுத்தமான மாவு எரியும்போது மண் வாசனை வரும். ஆனா கலப்பட மாவு மாத்தி வித்தியாசமான வாசனை வரும்.
கோதுமை மாவால எறும்புகளையும் ஓட வச்சுடலாம். எப்படின்னு தெரியுமா?
எல்லாருடைய வீட்டுலயும் எறும்புகள் நிறைய இருக்கும். இவை சுவத்துல, தரைல சுத்திக்கிட்டே இருக்கும். ஆனா இவற்றை கோதுமை மாவால ரொம்ப எளிதா ஓட வச்சுடலாம்.
இதுக்காக எறும்புகள் சுத்துற இடத்துல மாவு வரிசையா தூவுங்க. இதனால சில நிமிஷத்துலயே எறும்புகள் மாவு போட்ட இடத்தை விட்டு ஓடிடும். ஏன்னா எறும்புகளுக்கு மாவு மணம் பிடிக்காது. மாவு தெளிச்சாலும் எறும்புகள் ஒண்ணு கூட இல்லாம ஓடிடும்.