இனி பணம் செலவு செய்யாதீங்க! இது மட்டும் செஞ்சா போதும்... மகிழ்ச்சியாக இருப்பீங்க..!!

Published : Jul 20, 2023, 04:55 PM ISTUpdated : Jul 20, 2023, 05:33 PM IST

உங்களது பணத்தை வீணாக செலவு செய்யாமல் உங்கள் பொழுதுகளை கழிக்க இங்கே சில விஷயங்கள் உள்ளன. அவற்றிற்கு உங்கள் பணத்தை செலவழிக்க அவசியம் இல்லை.

PREV
16
இனி பணம் செலவு செய்யாதீங்க! இது மட்டும் செஞ்சா போதும்... மகிழ்ச்சியாக இருப்பீங்க..!!

பணம் செலவழிப்பதற்கு பதிலாக அர்த்தமுள்ள மற்றும் மகிழ்ச்சியான செயல்பாடுகளைக் கண்டறிவது, உங்களை புத்துணர்ச்சியூட்டும் மற்றும் திருப்திகரமான அனுபவமாக இருக்கும். உங்களிடம் பணம் இல்லாமல் இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலும் உங்கள் பொழுதுபோக்கு எவ்வித செலவு இல்லாமல் செலவழிக்க பல வாய்ப்புகள் உண்டு அதனை நீங்கள் ஆராயலாம். எனவே, நீங்கள் உங்கள் பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக செய்ய வேண்டிய 5 விஷயங்களை இங்கே உள்ளன.

26

இயற்கையை ரசியுங்கள்:
இதற்கு நீங்கள் மலையேறலாம், பைக் சவாரி செய்யலாம் அல்லது உள்ளூர் பூங்காவில் சுற்றுலா செல்லலாம். மேலும் நீங்கள் நடைப்பயணத்திற்குச் செல்வதன் மூலமோ  அல்லது இலவச சமூக நிகழ்வுகளைப் பார்ப்பதன் மூலமோ ஒருவர் தங்கள் உள்ளூர் பகுதியில் மறைக்கப்பட்ட ரத்தினங்களைக் கண்டறியலாம். அதுபோல் நீங்கள் உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ உங்களுக்கு பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம். இதுமட்டுமல்லாமல், கலை கண்காட்சிகள், அருங்காட்சியகங்கள் போன்ற இலவச நிகழ்வுகளுக்கும் செல்லுங்கள்.
 

36

மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்:
நீங்கள் உங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள சிறிது ஓய்வு எடுக்கலாம் அல்லது தியானம் மேற்கொள்ளலாம். இது மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஒட்டுமொத்த நல்வாழ்வை அதிகரிக்கவும் உதவும். நீங்கள் ஒரு புத்தகத்தை எழுதலாம் அல்லது நீங்கள் படிக்க விரும்பிய புத்தகத்தை சிறிது நேரம் ஒதுக்கி படியுங்கள். ஜாகிங், வீட்டில் யோகா பயிற்சி செய்தல் அல்லது உடற்பயிற்சி வீடியோக்கள் அல்லது ஆப்ஸ் மூலம் உடற்பயிற்சி செய்யும் நடைமுறைகளைப் பின்பற்றுதல் போன்ற உடல் செயல்பாடுகளில் நீங்கள் ஈடுபடலாம்.

இதையும் படிங்க: எச்சரிக்கை: மறந்தும் கூட இந்த பானங்களை செப்பு பாத்திரத்தில் குடிக்காதீங்க..!! விளைவுகள் பயங்கரம்..!!

46

புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள்:
சமையல், இசைக்கருவி வாசித்தல், ஓவியம் வரைதல் அல்லது நீச்சல் போன்ற புதிய திறன் அல்லது பொழுதுபோக்கைக் கற்றுக்கொள்ள ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களைப் பயன்படுத்துங்கள். புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது உங்கள் எல்லைகளை விரிவுபடுத்தும், உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கவும், சாதனை உணர்வை வழங்கவும் முடியும்.

56

நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன்  உயரம் ஒதுக்குங்கள்:
நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் இரவு சினிமாவுக்கு செல்லலாம். மேலும் உங்களுக்குப் பிடித்த திரைப்படங்களைப் பார்க்கலாம் அல்லது புதியவற்றைப் பார்க்கலாம். இரவில் குடும்பத்தின் ஒரு உடன் சாப்பிடும் போது சிறிது உரையாடுங்கள்.

இதையும் படிங்க: நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உணவு உண்ணும் போது இந்த 7 விஷயங்களைப் பின்பற்றுங்கள்..!!

66

ஒழுங்கமைக்கவும்:
உங்கள் வாழ்க்கை இடத்தை ஒழுங்கமைக்க சிறிது நேரம் செலவிடுங்கள். இது உங்களுக்கு சாதனை உணர்வைத் தருவதோடு மேலும் அமைதியான சூழலை உருவாக்கலாம். மேலும் உங்கள் பட்ஜெட்டைப் புதுப்பிக்க அதற்காக சிறிது நேரத்தைச் செலவிடலாம்.  உங்கள் வாழ்விடத்தை ஒழுங்கமைப்பது மற்றும் நடைமுறை படுத்துவது, உளவியல் ரீதியான பல நன்மைகளை கொண்டு வந்து உங்கள் வாழ்க்கையை மிகவும் எளிதாக்க உதவும்.

click me!

Recommended Stories