பெண்களிடம் இந்த தவறுகளை மட்டும் செய்யதீங்க.. எப்படி நடந்துகொண்டால் பெண்களுக்கு பிடிக்கும்?

First Published | Jul 20, 2023, 11:25 AM IST

பெண்கள் விஷயத்தில் ஆண்கள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

பெண்களுடன் பழகும்போது ஆண்கள் மிகுந்த சிரமத்தையும் பதட்டத்தையும் சந்திக்கின்றனர். எனவே, பெண்களை ஈர்க்கும் போது அவர்கள் சில தவறுகளை செய்கிறார்கள். பெண்கள் விஷயத்தில் ஆண்கள் தவிர்க்க வேண்டிய சில பொதுவான தவறுகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

ஒரே மாதிரியான அல்லது பொதுவான அடிப்படையில் பெண்களைப் பற்றிய அனுமானங்களைச் செய்வதாகும். அதாவது பெண்களே இப்படி தான் என்று ஒட்டுமொத்த பெண்களையும் சேர்த்து பெண்களிடம் பேசக்கூடாது. ஒவ்வொரு தனி நபரும் தனிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனிப்பட்ட சொந்த எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் விருப்பங்கள் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, பெண்ணிடம் பழக வேண்டும்.

Latest Videos


எந்தவொரு உறவிலும், அது உடல் ரீதியாகவோ அல்லது உணர்ச்சி ரீதியாகவோ இருவரின் சம்மதம் மிகவும் முக்கியமானது. எந்தவொரு நெருக்கமான அல்லது தனிப்பட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு முன் வெளிப்படையான சம்மதத்தை பெறுவது அவசியம். மேலும் உங்கள் துணையின் எல்லைகளை எப்போதும் மதிக்கவும்.

ஆண்கள் பெண்களை புறக்கணிக்கும்போது அல்லது சிறுமைப்படுத்தி பேசும் மிகப்பெரிய தவறுகளை செய்கிறார்கள். இது அவர்களின் திறன்களையும் பங்களிப்புகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இழிவான கருத்துகளை கூறுவதையோ, பாலியல் நகைச்சுவைகளில் ஈடுபடுவதையோ அல்லது பெண்களை அவர்களின் தோற்றத்தின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடுவதையோ தவிர்க்கவும். பெண்களை கண்ணியமாக நடத்துங்கள், உடல் பண்புகளுக்கு அப்பால் அவர்களின் மதிப்பை அங்கீகரிக்க வேண்டும்.

பெண்களின் உணர்வுகள் மற்றும் கருத்துக்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும். பெண்களின் அனுபவங்கள், உணர்வுகளை நிராகரிப்பதையோ அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையோ தவிர்க்கவும். பெண்கள் பேசுவதை ஆர்வமுடன் கேட்க வேண்டும். ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடுங்கள். பல்வேறு கண்ணோட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உரையாடல்களை வளர்க்கவும்.

பாலின சமத்துவத்தை ஆதரிக்காதது பல பெண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். பாலின சமத்துவத்தை தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும் மற்றும் பெண்களின் உரிமைகளுக்காக வாதிட வேண்டும். பெண்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் அமைப்பு ரீதியான தடைகள் குறித்து விழிப்புடன் இருங்கள். சமமான சமுதாயத்தை உருவாக்குவதில் தீவிரமாக செயல்படுங்கள்.

click me!