Fish Storage Tips : ஃப்ரிட்ஜில் மீனை எவ்வளவு நாள் வரை வைக்கலாம்? கட்டாயம் இப்படி செய்யனும்!!

Published : Aug 20, 2025, 10:56 AM IST

இந்த பதிவில் மீன்களை எப்படி, எவ்வளவு நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருக்கலாம் என்று பார்க்கலாம்.

PREV
14
Fish Storage Tips

மீன் பிரியர்கள் தினமும் மீன் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் இதற்காக தினமும் கடைசி சென்று வாங்க முடியாது. மேலும் கடல் பகுதிக்கு அருகில் இல்லாதவர்களுக்கு தினமும் மீன் வாங்குவது சற்று கடினம் தான். இதனால் பெரும்பாலானோர் வாரத்திற்கு ஒருமுறை மொத்தமாக மீனை வாங்கி அதை ஃப்ரிட்ஜில் வைத்து அந்த வாரம் முழுவது பயன்படுத்துவார்கள். ஆனால் மீன்களை வாங்கி ஃப்ரிட்ஜில் எப்படி, எத்தனை நாட்கள் வைத்து பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

24
ஃப்ரெஷ் ஆன மீன்களை ஃப்ரிட்ஜில் எவ்வளவு நாட்கள் சேமிக்கலாம்?

ஃப்ரெஷ் ஆன மீன்களை 1-2 நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் சேமிக்கலாம். அதுவும் நீங்கள் வாங்கும் மீனின் தன்மைக்கு ஏற்ப தான் முடிவு செய்ய வேண்டும். அதாவது முழு மீன் அல்லது வெட்டப்பட்ட மீன் போன்றவற்றின் அடிப்படையில் இவற்றை ஒன்றிலிருந்து இரண்டு நாட்களுக்குள் சேமிக்கலாம். முக்கியமாக நீங்கள் வாங்கும் என் பிரெஷ் ஆக இருக்கிறதா என்று சோதித்து பார்த்து வாங்குங்கள். பழைய மீன் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

34
ஃப்ரிட்ஜில் மீன்களை சேமிப்பது எப்படி?

ஃப்ரிட்ஜில் மீனை வைக்கும் போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் பிற உணவுகளில் பரவாமல் இருக்கும் படி சேமிக்க வேண்டும். மேலும் மீனில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைவதை தடுக்க 40 டிகிரி அல்லது அதற்கு குறைவாக குளிர்சாதன பெட்டி இருக்க வேண்டும். அதுபோல நீங்கள் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்த மீன் நிறம் மாறி இருந்தாலோ அல்லது அதன் வாசனை மோசமாக இருந்தாலோ அதை சமைக்க வேண்டாம்.

44
சமைத்த மீன்களை எவ்வளவு நாள் சேமிக்கலாம்?

ஃப்ரிட்ஜில் சமைத்த மீன்களை 3-4 நாட்கள்வரை சேமிக்கலாம். முடிந்த அளவு இரண்டு நாட்களுக்குள் சமைத்த மீனை சாப்பிட முயற்சி செய்யுங்கள் இல்லையெனில் அளவாக சமைக்கவும். சிலர் மீன்களை மொத்தமாக பொறித்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து அவ்வப்போது எடுத்து சாப்பிடுவார்கள். ஆனால் இது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கை விளைவிக்கும். இனி இந்த தவறை செய்யாதீர்கள் மீனை வேண்டி அளவு மட்டும் பொறித்து, மற்றதை காற்று புகார் டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் சேமிக்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories