ஜப்பானியர்கள் தங்களுடைய ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் உலகம் முழுதும் அறியப்படுகிறார்கள். நீண்ட ஆயுளுக்கு அவர்களுடைய உணவு பழக்கம் சுறுசுறுப்பான வாழ்வியல் முறைகள் போன்றவை அதற்கு காரணமாக உள்ளது.
26
japanese food habits in tamil
ஜப்பானில் பெரும்பாலோனோர் உடலமைப்பு ஒல்லியாக உள்ளது. அவர்களுடைய உணவு பழக்கம் இதற்கு உறுதுணையாக உள்ளது. பெரும்பாலும் ஜப்பானியர்கள் பாரம்பரியமான உணவு முறைகளையே இன்றளவிலும் கடைபிடித்து வருகிறார்கள். பருவ காலங்களில் காய்கறிகள், புளிக்க வைத்த உணவுகள், மீன், இறைச்சி போன்றவற்றை எடுத்துக் கொள்கிறார்கள்.
ஜப்பானியர்கள் உணவு சமைக்கும் போது அதனுடன் இந்தியர்களைப் போல அதிகமான மசாலாக்களை சேர்ப்பதில்லை. அவர்களுடைய உணவில் இடம்பெறும் மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் காணப்படுகின்றன. இவை அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக பதப்படுத்த உணவுகளை அதிகம் அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை இது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.
மற்ற நாட்டு உணவு முறைகளை ஒப்பிடும் போது ஜப்பானில் குறைந்த அளவிலான உணவுகளை மக்கள் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அந்த உணவில் புரதம், கார்போஹைட்ரேட், காய்கறிகள் போன்றவை சம அளவில் இடம்பெறுகின்றன. ஜப்பானியர்கள் ருசிக்கு முக்கியத்துவம் அளித்தாலும், அளவாக உண்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். குறைந்த அளவில் சாப்பிடுவதன் மூலமாக குறைவான கலோரிகளை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இது அவர்களுடைய எடையை நிர்வகிப்பதில் உதவுகிறது.
மெதுவாக சாப்பிடுதல்:
உணவு சாப்பிடும் போது வேகமாக சாப்பிடுவதை ஜப்பானியர்கள் தவிர்க்கிறார்கள். உணவு சாப்பிடுவதை அவர்கள் ஒரு அனுபவமாக கருதுகிறார்கள். உணவை நன்கு மென்று மெதுவாக உண்கிறார்கள். அவர்கள் வயிறு நிரம்பிய பிறகு உணவு உண்பதை நிறுத்த அவர்களுக்கு உடலில் இருந்து கொடுக்கப்படும் சிக்னலை அவர்கள் கவனிக்கிறார்கள். சாப்பிடுவதில் கவனம் செலுத்துவதால் அதிகப்படியான உணவு உண்பதை ஜப்பானியர்களால் தவிர்க்க முடிகிறது இதனால் அவர்களுடைய செரிமான மண்டலம் நன்கு செயல்படுகிறது உடல் எடையும் கட்டுக்குள் இருக்கிறது.
46
japanese food in tamil
புதிய உணவுகள்:
ஜப்பானியர்களுடைய உணவு வழக்கத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மிகக் குறைந்த அளவிலேயே இடம்பெறுகின்றன. அவர்கள் புதியதாக சமைக்கும் உணவுகளை விரும்புகின்றனர். பிரிட்ஜில் வைக்காத தோட்டத்தில் பறிக்கப்பட்ட காய்கறிகள், கடற்பாசி உணவுகள், புளிக்க வைக்கப்பட்ட சோயா போன்றவற்றை அதிகம் உண்கிறார்கள். பெரும்பாலும் துரித உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை.
வீட்டில் தயார் செய்யப்பட்ட அல்லது உள்ளூர் உணவுகளை தான் பயன்படுத்துகிறார்கள். புளிக்க வைத்த உணவு, மெதுவாக சமைப்பது, கிரிலிங் போன்றவை அவர்களுடைய முக்கிய உணவு பழக்கங்கள். பதப்படுத்தப்பட்ட பழைய உணவுகளை அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் சர்க்கரை, கெட்ட கொழுப்புகளை எடுத்து கொள்வது தவிர்க்கப்படுகிறது. புதிதாக தயாரித்த ஆரோக்கியமான உணவுகளையே உண்கிறார்கள். இதுவே ஆரோக்கியத்திற்கும், எடை மேலாண்மைக்கும் உதவுகிறது.
56
What is the Japanese secret to long life in tamil
சுறுசுறுப்பான வாழ்க்கை:
ஜப்பானியர்கள் தங்களுடைய வாழ்க்கை முறையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்பவர்கள் அன்றாட வாழ்க்கையில் நடை பயிற்சி உடற்பயிற்சி உள்ளிட்ட ஏதேனும் ஒரு உடல் சார்ந்த செயல்பாடுகளை செய்பவர்களாக இருப்பார் இவை தவிர தோட்டக்கலை உள்ளிட்ட செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள் சுறுசுறுப்பான அவர்களுடைய வாழ்க்கை முறை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. தினசரி வாழ்க்கையில் உடற் செயல்பாடுகளை செய்வதால் உடல் எடையும் சீராக பராமரிக்கப்படுகிறது.
ஆரோக்கிய பானங்கள்:
ஜப்பானில் ஆரோக்கிய பானங்கள் குடிப்பது அவர்களுடைய வாழ்க்கை முறையில் தனி இடத்தை பிடித்துள்ளது. அந்த நாட்டில் கிரீன் டீ பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கேடசின்கள் உள்ளன. இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவக் கூடியவை. ஆரோக்கியமான உணவுகளுடன் கிரீன் டீயும் குடிப்பதால் உடல் எடையும் கணிசமாக குறையும். செயற்கை சர்க்கரை கலந்த பானங்களை அருந்துவதை விடவும் கிரீன் டீ அருந்துவதால் உடலின் செயல்பாடு பயன்படுகிறது.
66
Japanese Healthy Lifestyle Habitse for Long Life in tamil
ஜப்பானியர்கள் இந்த பழக்கங்களை தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் பின்பற்றி வருவதால் அவர்களுடைய உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதில்லை. அவர்களுடைய ஆரோக்கியமான இந்த பழக்கங்கள் உதவியாக இருக்கின்றன.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.