Snakes : பாம்புகளுக்கு வெளியில் தெரியும் காதுகளோ, காதுத் துளையோ கிடையாது. ஆனால் அவை ஒலிகளைக் கேட்கும். பாம்புகளுக்கு காதுகளே இல்லாமல் எவ்வாறு ஒலிகளை உணர்கின்றன என்பதைத் தெரிந்தால் தலை சுற்ற வைக்கும். அந்த விவரங்களை இங்கே விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
பாம்புகளுக்கு உண்மையில் காதுகள் இல்லையா? ஒலிகளை எவ்வாறு உணர்கின்றன?
பாம்புகளுக்கு காது கேட்கும் திறனே இருக்காது, அவை முற்றிலும் செவிடானவை என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இது ஒரு வதந்தியான தவறான கருத்து மட்டுமே. உண்மையில் பாம்புகளுக்கு வெளியே தெரியும் காதுகளோ அல்லது நம்மைப் போன்ற காது மடல்களோ, காதுத் திரைகளோ (டிரம்ஸ்) கிடையாது. இருப்பினும், அவைகளால் தரைவழியாக வரும் அதிர்வுகளையும், காற்றில் உண்டாகும் குறைந்த அதிர்வெண் (லோ-பிரிக்குவன்சி) ஒலிகளையும் மிகத் தெளிவாக உணர முடியும். நமக்கு வெளியே தெரியும் காது அமைப்பு இருப்பது போல, பாம்புகளுக்கு அவற்றின் தாடை எலும்புகளுடன் இணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான உள் செவிப்புலன் அமைப்பு உள்ளது.
ரகசிய உடல் அமைப்பு: உள்ளே இருக்கும் முழுமையான கேட்கும் அமைப்பு
ஒரு பாம்போட தலையை நீங்க நல்லா கவனிச்சா, அதுக்கு காது துவாரமோ, வெளிக்காது பாகங்களோ இருக்காது. பல உயிரினங்கள்ல, காற்றில் வரும் சத்த அலைகள் காது ஜவ்வுல மோதி, அந்த அதிர்வுகளை உள்காதுக்கு அனுப்பும். ஆனா, பாம்புகள் பரிணாம வளர்ச்சியில வெளிக்காது, நடுக்காது அமைப்புகளை இழந்துடுச்சு. ஆனாலும், அதன் மண்டை ஓட்டுக்குள்ள முழுசா வளர்ச்சி அடைஞ்ச உள்காது இருக்கு. மனிதர்களுக்கு இருக்கும் ஸ்டேப்ஸ் (Stapes) எலும்பு மாதிரி, பாம்புகளுக்கு 'கொலுமெல்லா' (Columella) என்ற ஒரு சின்ன எலும்பு இருக்கு. இதுதான் அதிர்வுகளை உள்காதுக்கு கொண்டு சேர்க்குது.
பாம்புகள் சத்தத்தை உணர்றதுக்கு மிக முக்கியமான வழி, எலும்பு கடத்தல் (Bone Conduction) தான். பாம்பு தரையில படுத்திருக்கும்போது, அதோட கீழ்த்தாடை நேரடியா தரையைத் தொட்டுக்கிட்டு இருக்கும். தரையில மனுஷங்க கால் சத்தம், எதிரிகளோட நடமாட்டம்னு எந்த சின்ன அசைவு நடந்தாலும், அந்த அதிர்வுகள் மண் வழியா பரவும். இந்த அதிர்வுகள், தாடையில் உள்ள 'குவாட்ரேட்' (Quadrate) எலும்பு வழியா மேல போய், 'கொலுமெல்லா' எலும்பு மூலமா நேரடியா உள்காதுக்குள்ள போகுது. அங்கிருந்து நரம்பு சிக்னல்கள் பாம்போட மூளைக்கு போகுது.
பாம்புகளுக்கு காது ஜவ்வு இல்லாததால, காற்றில் வர்ற சத்தத்தை அதால கேட்க முடியாதுன்னு விஞ்ஞானிகள் ரொம்ப காலமா நம்புனாங்க. ஆனா, சமீபத்திய ஆய்வுகள் இந்த நம்பிக்கையை தப்புன்னு நிரூபிச்சிருக்கு. பாம்புகளால் காற்றில் பரவும் சத்தங்களையும் உணர முடியும். ஆனா, மனிதர்களோட ஒப்பிடும்போது பாம்புகளோட கேட்கும் திறன் ரொம்பவே கம்மி. மனுஷங்க 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரை கேட்பாங்க. ஆனா பாம்புகள் 80 ஹெர்ட்ஸ் முதல் 600 ஹெர்ட்ஸ் வரையிலான குறைந்த அதிர்வெண் சத்தங்களை மட்டும்தான் கேட்கும். சில வகை பாம்புகள்ல இது 50 ஹெர்ட்ஸ் முதல் 1000 ஹெர்ட்ஸ் வரை கூட இருக்கும். காற்றில் வரும் சத்த அலைகள், பாம்போட தோல், தசைகள், மண்டை ஓட்டை லேசா அதிர வைக்கும். இந்த சின்ன அதிர்வுகள் 'கொலுமெல்லா'வுக்கு மாறி, உள்காதுக்கு சிக்னல் அனுப்புது.
பாம்புப் பிடாரன்கள் மகுடி ஊதும்போது பாம்புகள் எப்படி ஆடுதுங்கிற ரகசியத்தை இந்த கேட்கும் திறனை வெச்சு புரிஞ்சுக்கலாம். மகுடி இசையை ரசிச்சுதான் பாம்பு ஆடுதுன்னு நாம நினைக்கிறது தப்பு. மகுடியிலிருந்து வர்ற உயர் அதிர்வெண் சத்தம், பாம்புகளோட கேட்கும் திறனுக்கு அப்பாற்பட்டது. உண்மையில, பாம்பு தன் முன்னாடி ஆடுற மகுடியோட அசைவுகளையும், பாம்பாட்டி தரையில தட்டுறதால வர்ற அதிர்வுகளையும் உணர்ந்துதான் தலையை ஆட்டுது. பாம்புகளால் சத்தத்தை ஒரு பாட்டு மாதிரி ரசிக்க முடியாது. ஆனா, தரை அதிர்வுகள், சத்த அழுத்தம் மூலமா தன்னோட சுற்றுப்புறத்தை அது புரிஞ்சுக்குது. வெளிக்காதுகள் இல்லாட்டியும், இந்தத் திறன் தான் பாம்புகள் வேட்டையாடவும், ஆபத்துல இருந்து தப்பிக்கவும் உதவுது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.