குளிர் டூ வெயில்.! ஏசியை நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்படுத்துவது எப்படி? நிபுணர்கள் கூறுவது என்ன.?

Published : Feb 21, 2025, 04:37 PM ISTUpdated : Feb 21, 2025, 10:17 PM IST

மழை மற்றும் குளிர் காலத்த்தில் பெரும்பாலான வீடுகளில் ஏசி பயன்பாடு குறைவாகவே இருக்கும. இந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஏசி பயன்படுத்தியே ஆக வேண்டும். ஆனால், கோடையில் ஏசி பயன்படுத்துவதற்கு முன்பு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டும். அவை என்னவென்று பார்ப்போமா...    

PREV
15
குளிர் டூ வெயில்.! ஏசியை நீண்ட நாட்களுக்கு பிறகு பயன்படுத்துவது எப்படி? நிபுணர்கள் கூறுவது என்ன.?
மழை,குளிர் காலத்தில் பயன்படுத்தாத ஏசி.! திடீரென கோடை காலத்தில் பயன்படுத்தலாமா.?

கோடை காலம் வந்துவிட்டது. இந்த சீசனில் வெயில்கள் கொளுத்தும். அதனால், அந்த வெப்பத்தை தாங்குவதற்கு ஏசி பயன்படுத்துவோம். இது மிகவும் சாதாரணம். ஆனால்.. மழைக்காலம், குளிர்காலத்தில் பயன்படுத்தாமல் வைத்த ஏசியை.. கோடையில் பயன்படுத்துவதற்கு முன்பு நிறைய முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையென்றால்.. நிறைய பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல், நீண்ட காலம் ஏசி பயன்படுத்தாமல் இருப்பது கூட அது பழுதடைய வாய்ப்பு உள்ளது.

25
ஏசி கேஸ் லீக்

கோடையில் ஏசி பயன்படுத்த வேண்டும் என்றால், முன்னதாகவே சில முன்னெச்சரிக்கைகள் எடுக்க வேண்டும். ஏசியை அதிக காலம் நல்லா வைக்கணும்னா ரெகுலர் சர்வீசிங் செய்யணும். ஏசியிலிருந்து நல்ல குளிர்ச்சி வரணும்னா கேஸ் லெவல்ஸ் அப்பப்ப செக் செய்து நிரப்பணும்.

35
ஏசியில் இன்னொரு பிரச்சனை

ஏசியில் கேஸ் அடிக்கடி லீக் ஆனால் அது பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கலாம். அதாவது ஏசி மாற்ற வேண்டிய நிலைமை கூட வரலாம். ஏசியில் கேஸ் லீக் ஆகுதுன்னா அது பெரிய பிரச்சனை. இதே பிரச்சனை கண்டினியூ ஆனா ஏசி மாற்ற வேண்டியிருக்கும். ஏசியில் கேஸ் சார்ஜ் செய்தாலும் சில்லுன்னு காத்து வரலேன்னா அது வேற பிரச்சனைக்கு அறிகுறியாக இருக்கலாம்.

 

45
பழைய ஏசி

உங்க ஏசி நல்லா பழையதாக இருந்தா அதாவது 10 லிருந்து 15 வருஷம் தாண்டிட்டா கேஸ் லீக் பிரச்சனை காமன். பழைய ஏசியை மெயின்டைன் செய்வது செலவு பிடிக்கும். அதனால இப்படிப்பட்ட டைமில் புது ஏசி வாங்குவது ஒன்னு தான் வழி.


 

55
கேஸ் லீக் பிரச்சனை

வருஷத்துக்கு ஒரு முறைக்கு மேல ஏசியில் கேஸ் லீக் ஆனா அது உங்க ஏசியில் பெரிய பிரச்சனை வரப்போகுதுன்னு சொல்றதுக்கு அறிகுறியாக இருக்கலாம். ஏசி நல்லா இருந்தா கேஸ் லீக் இல்லாம வருஷக்கணக்கா நல்லா வேலை செய்யும். நீங்க ஏசியில் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எதிர்கொண்டா புது ஏசி வாங்குங்க. அதனால நல்ல சில்லுன்னு காத்து வரும், கரண்ட் மிச்சமாகும், மெயின்டனன்ஸ் செலவு கூட குறையும்.

இவையெல்லாம் கண்டிப்பா செக் பண்ணிக்க வேண்டியது தான். அதுமட்டுமில்லாமல், வெயில்ல ஏசி யூஸ் பண்றதுக்கு முன்னாடி அதை கிளீன் பண்ணி யூஸ் பண்றது ரொம்ப முக்கியம். 

Read more Photos on
click me!

Recommended Stories