இந்த '6' பேரும் தவறுதலாக கூட பெர்பியூம் அடிக்கவே கூடாது! ஏன் தெரியுமா?

Published : Feb 21, 2025, 12:48 PM IST

Health Risks Of Perfume : வாசனை திரவியத்தை சில பேர் பயன்படுத்தவே கூடாது. அதற்கான காரணத்தை இங்கு காணலாம்.

PREV
17
இந்த '6' பேரும் தவறுதலாக கூட பெர்பியூம் அடிக்கவே கூடாது! ஏன் தெரியுமா?
இந்த '6' பேரும் தவறுதலாக கூட பெர்பியூம் அடிக்கவே கூடாது! ஏன் தெரியுமா?

பொதுவாக வாசனை திரவியத்தை விரும்பாதவர்கள் யாருமே இல்லை. ஒருசிலர் மட்டுமே விரும்பமாட்டார்கள். வாசனை திரவியம் பயன்படுத்துவதால், உடல் நல்ல வாசனை பெறும். இதனால் மனநிலையும் நன்றாக இருக்கும். மேலும் நம்பிகையும் அதிகரிக்கும். ஆனால் வாசனை திரவியத்தில் இரசாயனங்கள் இருப்பதால், அதை சரியாக பயன்படுத்தாவிட்டால், அது தொற்று நோயை ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இத்தகைய சூழ்நிலையில், வாசனை திரவியத்தை சில பயன்படுத்தவே கூடாது. அது யார் யார் என்று இங்கு காணலாம்.

27
சுவாச பிரச்சினையுள்ளவர்கள்:

ஆஸ்துமா அல்லது சுவாச பிரச்சினையுள்ளவர்கள் தப்பி தவறிகூட வாசனை திரவியத்தை பயன்படுத்தவே கூடாது. ஒருவேளை நீங்கள் வாசனை திரவியங்கள் பயன்படுத்த விரும்பினால் அதிக வாசனை உள்ளதை பயன்படுத்த வேண்டாம். இல்லையெனில், அது தொடர்ந்து தும்மல், இருமல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். 

37
கர்ப்பிணி பெண்கள்:

வாசனை திரவியத்தில் இருக்கும் சில இரசாயனங்கள் கர்ப்பிணி பெண்களுக்கு தலைவலி மற்றும் குமட்டலை ஏற்படுத்தும். எனவே, கர்ப்பிணி பெண்கள் வாசனை திரவியத்தை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

47
கை குழந்தைகள்:

பொதுவாக சிறு குழந்தைகளின் சருமம் ரொம்பவே மென்மையானது என்பதால், செண்ட் அவர்களுக்கு சரும பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதுதவிர, சுவாச பிரச்சினையையும் ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: Perfume: உடலின் 'இந்த' பாகங்களில் பெர்பியூம் யூஸ் பண்ணாதீங்க! பெரும் ஆபத்து! முழு விவரம்!

57
சரும பிரச்சனை இருப்பவர்கள்:

வாசனை திரவியங்களில் ஆல்கஹால் கலந்திருப்பதால் சரும பிரச்சனை உள்ளவர்கள் பெர்ஃப்யூம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அரிப்பு, எரிச்சல் உள்ளிட்ட சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க:  பெர்பியூம் போடுற குழந்தைகளுக்கு 'கணக்கு' வராதாம்.. ஏன் தெரியுமா? 

67
தலைவலி உள்ளவர்கள்:

உங்களுக்கு தலைவலி பிரச்சனை இருந்தால் நீங்கள் வாசனை திரவியத்தை பயன்படுத்த வேண்டாம். இல்லையெனில் அது தலைவலியை மேலும் அதிகரிக்க செய்வது மட்டுமல்லாமல் குமட்டல், தலை சுற்றல் போன்ற பிரச்சனைகளையும் உருவாக்கும். எனவே தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் சென்ட் போட வேண்டாம்.

77
அதிக நேரம் வெயிலில் இருப்பவர்கள்:

வாசனை திரவியங்களில் இருக்கும் சில ரசாயன பொருட்கள் அதிக நேரம் வெயிலில் விற்பவர்களுக்கு எதிர்வினையை ஏற்படுத்தும். இதனால் சருமத்தில் அரிச்சல் நிறம் மாறுதல் குமட்டல் தலைவலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவே அதிக நேரம் வெயிலில் இருப்பவர்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories