பூஜைகள், விரதங்கள், சுப காரியங்களில் வெற்றிலைக்கு தனி இடம் உண்டு. ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதிலும் இது முன்னணியில் உள்ளது. சாப்பிட்ட பிறகு வெற்றிலை சாப்பிடுவது பழங்காலம் முதல் வரும் பாரம்பரியம். இன்னும் சில திருமணங்கள், விழாக்களில் விருந்து போஜனத்திற்கு பிறகு வெற்றிலை கொடுக்கிறார்கள்.
ஆனால் தினமும் வெற்றிலை சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் உள்ளன என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ஒரு இலையால் நிறைய நோய்களை குணப்படுத்தலாம் என்று சொல்கிறார்கள். வெற்றிலையால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.