மக்கானா, பாதாம் கலந்த சத்துமிக்க புரோட்டின் இட்லி: சர்க்கரை நோயாளிகள் முதல் குழந்தைகள் வரை பெஸ்ட் சாய்ஸ்!

Published : Oct 02, 2026, 04:33 PM IST

உடல் எடையை குறைக்க உதவும் சுவையான மற்றும் சத்தான புரோட்டின் இட்லி செய்முறை. முளைகட்டிய பயறு மற்றும் நட்ஸ் வகைகள் சேர்த்து பஞ்சு போன்ற இட்லி செய்வது எப்படி?

PREV
14
உடல் எடையை குறைக்க புரோட்டின் இட்லி

வழக்கமான அரிசி இட்லிக்கு மாற்றாக, உடலுக்குத் தேவையான புரதச்சத்துக்கள் நிறைந்து நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைக்கக்கூடிய ஒரு அருமையான காலை உணவு இந்த புரோட்டின் இட்லி. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், ஜிம் செல்பவர்கள், வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இதில் நிறைந்துள்ளன. பஞ்சு போன்ற மென்மையோடும் அருமையான சுவையோடும் இதை மிக எளிதாகச் செய்துவிடலாம்.

24
தேவையான பொருட்கள்:

முளைகட்டிய பாசிபயறு - 1 கப்

உளுத்தம் பருப்பு - 1 கப்

பாதாம் - 10

கருப்பு கொண்டைக் கடலை - 1 கப்

மக்கானா - 1/2 கப்

அவல் - 1 கப்

உப்பு - தேவையான அளவு

34
செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பு, கருப்பு கொண்டைக் கடலை, தாமரை விதை எனப்படும் மக்கானா, பாதாம், அவல் ஆகிய அனைத்தையும் நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு சுமார் 3 முதல் 4 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பருப்பு, நட்ஸ் வகைகள் நன்கு ஊறியதும், ஊறவைத்த கலவையுடன் முன்னதாகவே தயார் செய்து வைத்துள்ள சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய பாசிபயறையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் மிக்ஸி அல்லது கிரைண்டரில் போட்டு, தேவையான அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து வழக்கமான இட்லி மாவு பதத்திற்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

44
உடல் எடையை குறைக்க உதவும்

அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கைபட நன்றாகக் கரைத்து, ஒரு இரவு முழுவதும் மூடி வைத்து புளிக்க வைக்கவும். மறுநாள் காலையில் மாவு நன்கு பொங்கி வந்ததும், லேசாகக் கிளறிவிட்டு இட்லி தட்டுகளில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்தால், உடலுக்கு அளப்பரிய வலிமை தரும் சத்தான, சுவையான புரோட்டின் இட்லி தயார். இதனைத் தேங்காய் சட்னி அல்லது காரச் சட்னியுடன் சேர்த்துச் சுடச்சுடப் பரிமாறலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories