Health benefits of 9 Seed: நீங்கள் நலமுடன் வாழ்வதற்கு...அவசியம் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த 9 விதைகள்

Published : Jul 14, 2022, 03:44 PM IST

Health benefits of 9 Seed: பாரம்பரிய உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்ட 9 விதைகள் பட்டியலில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இவை நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நிச்சயம் பயன் உள்ளதாக இருக்கும். 

PREV
110
Health benefits of 9 Seed: நீங்கள் நலமுடன் வாழ்வதற்கு...அவசியம் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த 9 விதைகள்

பாரம்பரிய உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்ட 9 விதைகள் பட்டியலில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இவை நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நிச்சயம் பயன் உள்ளதாக இருக்கும். 

210

பூசணி விதைகள்:

பூசணி விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்த நாளங்களின் தளர்வு மற்றும் தடையற்ற குடல் செயல்பாடு போன்ற முக்கியமான உடலியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்க உதவுகிறது மற்றும் உங்கள் தசைகளுக்கு சக்தி அளிக்கிறது. அவற்றை சூப் அல்லது சாலட்டுடன் சேர்த்து சாப்பிட்டு பலன் பெறலாம்.மேலும், பூசணி விதைகள் செல்களைப் புதுப்பித்தல், சருமச் சேதத்தை சரிசெய்து ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவித்தல் போன்றவற்றை செய்கிறது.
 

 மேலும் படிக்க....Biryani ilai: உடல் எடையை ஈஸியாக குறைக்கும்...பிரியாணி இலையின் மகத்துவம் தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க

 

310
Quinoa Upma

குயினோ:

சமீபத்தில் ஊட்டச்சத்து நிபுணர்களால் அதிகம் பரிந்துரைக்கப்படும்  உணவான குயினோ, உங்கள் புரதத்திற்கும்,  ஊட்டசத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. குயினோவில் புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்துடன் ,மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற வைட்டமின்கள் உள்ளன. உடல் எடை குறைப்புக்கு சிறந்த உணவாக கருதப்படும் குயினோ காலை உணவில் கட்டாயம் சேர்த்து கொள்ளலாம்.

410

ஆளி விதைகள்

ஆளி விதைகள் ஆரோக்கியமான மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்ட பொருளாகும். ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைப் பெற உதவும், இது உங்கள் இதயத்திற்கு நல்லது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். ஆளி விதையில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். ஆளி விதைகள் இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஆளி விதைகளில் உள்ள அதிக அளவு இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் அளவை மேம்படுத்த உதவுகிறது. இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடியாக்கி உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்.  மற்றுமொரு வழியாக, முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம். 

 

510

மாதுளை விதைகள்

மாதுளம் விதைகளில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றம் அதிகம் உள்ளன. ஒரு முழு கப் மாதுளை விதையில் 130 கலோரிகள் உள்ளது. மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதாலும், அதன் விதையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை, காயங்களின் மீது தடவுவதாலும் காயம் விரைவில் குணமாகும். அத்துடன் தழும்புகளும் மறையும். ஒரு சாலட் அல்லது முழு தானிய உணவில் சேர்த்து சாப்பிட்டு பலன் பெறலாம்.
 

610

சணல் விதைகள்

சணல் விதைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இவற்றில், ஏராளமான புரதங்களும் உள்ளன. 2 தேக்கரண்டி சணல் விதைகளில் கிட்டத்தட்ட 7 கிராம் புரதம், ஆளி அல்லது சியா விதைகளை விட அதிகமாக உள்ளது. இதில் உள்ள விட்டமின் ஈ, மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, அமினோ அமிலங்கள், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

710

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகள் மென்மையாகவும் சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும்.  1 அவுன்ஸ் சூரியகாந்தி விதைகளில்  வைட்டமின் ஈ, 12 கிராம் புரதம், செலினியம், நியாசின், மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன.  சூரியகாந்தி விதைகளில் இருக்கும் வைட்டமின் பி 1  நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிக்கல்களை தடுக்க உதவுகிறது. எனவே உங்க காலை உணவை சுவையானதாக துவங்க சூரிய காந்தி விதைகள் உதவும்.

 மேலும் படிக்க....Biryani ilai: உடல் எடையை ஈஸியாக குறைக்கும்...பிரியாணி இலையின் மகத்துவம் தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க

 

810

சியா விதைகள்

சியா விதைகள் நார்ச்சத்து, தாவர அடிப்படையிலான புரதம், தாதுக்கள். ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இவை நமது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. இதை நீங்கள் தயிர் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். பாதாம் பாலுடன் ஊற வைத்து சாப்பிடுங்கள். ஏனெனில், வெறும் ஒரு அவுன்ஸ் சியா விதைகள் (அதாவது இரண்டு தேக்கரண்டி) 138 கலோரிகள், 12 கிராம் கார்போஹைட்ரேட்,10 கிராம் நார்ச்சத்து ஐந்து கிராம் புரதம் மற்றும் எட்டு கிராம் கொழுப்பு ஆகியவை உள்ளது. 

910
Wild Rice

வொயில்டு ரைஸ்:

வொயில்டு ரைஸ் என்பது உண்மையில் ஒரு புல் விதை வகையைச் சார்ந்தது. இது ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், வைட்டமின் பி6 மற்றும் நியாசின் ஆகியவற்றையும் வழங்குகிறது. இது ஒரு அரிசி வகை என்பதால், சமைத்தால்  மென்மையாகவும் பஞ்சுபோன்றதாகவும் சமைக்கிறது, மேலும் சூடான தானியங்கள் பச்சை சாலட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். மேலும், இது மற்ற முழு தானியங்களை விடபுரதம் அதிகமாக உள்ளது மற்றும் வெள்ளை அரிசியை விட அதிக ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது.

.. மேலும் படிக்க....Biryani ilai: உடல் எடையை ஈஸியாக குறைக்கும்...பிரியாணி இலையின் மகத்துவம் தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க

1010

 எள் விதைகள்:

இதில் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய ஒரு வகையான கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இந்த எள் விதைகளில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், ஃப்ளேவோனாய்டு பீனாலிக் ஆன்டி-ஆகஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து போன்றவை அதிகமாக காணப்படுகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. ஆரோக்கியமான எலும்புகள் உருவாக உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க  உதவும். 
 

Read more Photos on
click me!

Recommended Stories