அப்ப இன்னும் கொண்டாட்டம் முடியலயா? லண்டனில் 7 ஸ்டார் ஹோட்டலை அம்பானி குடும்பம் புக் செய்துள்ளதா?

First Published | Jul 27, 2024, 2:43 PM IST

லண்டனில் திருமணத்திற்கு பிந்தைய நிகழ்ச்சிகளை நடத்த அம்பானி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

Ambani Family Wedding

ஆனந்த் அம்பானி தனது நீண்டகால காதலியான ராதிகா மெர்ச்சண்டை கடந்த 12-ம் தேதி திருமணம் செய்துகொண்டார். மும்பையில் உள்ள ஜியோ வோர்ல்ட் செண்டரில் இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, லண்டனில் திருமணத்திற்கு பிந்தைய நிகழ்ச்சிகளை நடத்த அம்பானி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.ஸ்டோக் பார்க்கில் இந்த விழாக்கள் நடைபெற உள்ளதாகவும் கூறப்பட்டது.

Ambani Family Wedding

ஆனால் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது லண்டன் ஹோட்டல் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ள ஸ்டோக் பார்க் ஹோட்டல் நிர்வாகம் இந்த கோடையில் தங்கள் தோட்டத்தில் எந்த திருமண நிகழ்வுகளையும் நடத்தப்போவதில்லை என்று தெளிவுபடுத்தியது.

Tap to resize

Ambani Family Wedding

அந்த பதிவில் , "ஸ்டோக் பார்க்கில், நாங்கள் பொதுவாக தனிப்பட்ட விஷயங்களில் கருத்து தெரிவிப்பதில்லை, ஆனால் சமீபத்திய ஊடகங்களில் வெளியான தகவல் போல் நாங்கள் இந்த கோயில், திருமண கொண்டாட்டங்கள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.” குறிப்பிட்டுள்ளது. 

Ambani Family Wedding

மேலும் "எப்போதும் போல், ஒரு உலகத் தரம் வாய்ந்த ஹோட்டல் மற்றும் கோல்ஃப் மைதானமாக எங்களின் எதிர்கால பார்வைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், மேலும் இதை வழங்க எங்கள் பங்குதாரர்கள் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் தொடர்ந்து பணியாற்றுவோம்." என்றும் தெரிவித்துள்ளது. 

Ambani Family Wedding

ஆனந்த் அம்பானியும் ராதிகா மெர்ச்சண்டும் 6 ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்ப மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாம்நகரில் ஆனந்த் - ராதிகாவின் முதல் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் நடந்தது தொடர்ந்து கடந்த மே மாத இறுதி ஐரோப்பாவில் ஒரு சொகுசு கப்பலில் 2-வது ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Ambani Family Wedding

இந்த ஆடம்பர நிகழ்வுகளுக்குப் பிறகு இந்த மாதம் தொடக்கம் முதலே ஆனந்த் - ராதிகாவின் திருமண கொண்டாட்டங்கள் களைகாட்டியது. ஹல்தி, மெஹந்தி, சங்கீத், திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்காக அம்பானி குடும்பத்தினர் திருமண விழா பிரம்மாண்டமாக நடந்தது. 

Ambani Family Wedding

ஷாருக்கான், சல்மான் கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர், ஆலியா என ஒட்டுமொத்த திரையுலகமே அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டது.

Ambani Family Wedding

ரஜினி, சூர்யா ஜோதிகா, நயன்தாரா விக்னேஷ் சிவன், அட்லீ பிரியா உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்.  பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விழாவில் கலந்து கொண்டார். இந்த திருமண கொண்டாட்டத்தில் கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன் போன்ற அமெரிக்க பிரமுகர்களும் கலந்து கொண்டனர். 

Latest Videos

click me!