Published : Jun 14, 2025, 01:03 PM ISTUpdated : Jun 14, 2025, 01:04 PM IST
நாளை (ஜூன்.15) தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் உங்கள் அப்பாவுக்கு அனுப்ப வேண்டிய சில அழகான வாழ்த்துக்கள், செய்திகள், கவிதைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
நம் ஒவ்வொருவருக்கும் முதல் ஹீரோ யாரென்றால் அப்பா தான். அப்பா எந்நேரமும் நம் மீது கோபம், கண்டிப்புடன் நடந்து கொண்டாலும், நமக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்து தர வேண்டும் என்று தன்னை வருத்திக்கொண்டு கடுமையாக உழைக்கும் ஒரு ஜீவனும் அவரே. ஆகவே, தந்தையர்களின் எண்ணற்ற தியாகங்களை நினைத்து கொண்டாடும் நோக்கமாக உலம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
27
அந்தவகையில், ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை தான் தந்தையர் தினமாக கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு தந்தையர் தினம் நாளை வருகிறது. அந்நாளில் நம்முடைய வாழ்க்கையின் வழிகாட்டியான அப்பாவை மெய்சிலிர்க்க வைக்கும் சில தந்தையர் தின வாழ்த்துக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
37
1. தந்தை வெறும் அழைப்பதற்கு மட்டுமல்ல; வாழ்க்கைக்கு வழிகாட்டியும் அவரை. இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா!!