ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான, பக்ரீத் இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
25
Happy Bakrid 2022
பக்ரீத் பண்டிகை எப்போது?
இஸ்லாமியர்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம் நாள் இந்த பக்ரீத் பண்டிகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த வருடம் வரும் ஜூலை 10 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
சுமார் 4000 வருடங்களுக்கு முன்பு இராக்கில் வாழ்ந்தவர் இறைத் தூதராக நம்பப்படுபவர் இப்ராகிம். இவர் பல ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது மனைவி மூலமாக தந்தை பாக்கியம் அடைந்தார். அந்த ஆண் குழந்தைக்கு இஸ்மாயில் என பெயரிட்டார்.
45
Happy Bakrid 2022
நாட்கள் கடந்தது, ஒரு நாள் இப்ராஹிமின் கனவில் ஒரு கனவு தோன்றியது. அதில், பால்ய பருவத்தை அடைந்த அவரின் மகனான இஸ்மாயீலை தனக்கு பலியிடுமாறு கடவுள் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, இப்ராஹிம் தனது மகனின் அனுமதியுடன் பலியிட ஏற்பாடுகளை செய்தார். அப்போது கடவுள், சிஃப்ரயீல் என்ற வான தூதர் ஒருவரை அனுப்பி இஸ்மாயீலை பலியிடுவதை நிறுத்த செய்தார். பின் அங்கிருந்த ஆடு ஒன்றை பலியிட கடவுள் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தின் நபிகளாரின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டத்தில், புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை மேற்கொள்வார்கள். இறைவனின் விருப்பத்தின் பேரில், வீட்டில் வளர்த்த ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுகின்றனர். அத்துடன், ஒவ்வொருவரும் வீட்டிலேயே உணவு சமைத்து நண்பர்கள்,உறவினர்கள், ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.