நாள் முழுவதும் லேப்டாப்-மொபைலில் டைப் செய்துகொண்டே இருக்கிறோம், கையில் பேனாவைப் பிடிப்பதே இல்லை. ஆனால், இதனால் உங்கள் மூளைக்கு என்ன பாதிப்பு ஏற்படுகிறது தெரியுமா? சமீபத்திய ஆய்வு சொல்லும் ரகசியம் இதுதான்.!
கையால் எழுதுவது vs டைப்பிங்: எது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்குகிறது?
ஆய்வுகளின்படி, கையால் எழுதுவது மூளையின் பல பகுதிகளை ஒரே நேரத்தில் செயல்படச் செய்கிறது. எழுத்துக்களை நினைவில் வைத்துப் பதிவு செய்வது, கை-கண் ஒருங்கிணைப்பு, சிந்தனை மற்றும் நினைவாற்றல் போன்ற திறன்கள் இதில் ஈடுபடுகின்றன. ஆனால், டைப்பிங் செய்யும்போது இத்தகைய மூளைச் செயல்பாடுகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
25
நினைவாற்றலை 30% வரை அதிகரிக்கும் கையெழுத்து! தேர்வுக்கு முன் இதை முயற்சி செய்யுங்கள்.
கையால் எழுதப்பட்ட குறிப்புகள், தகவல்களை மூளையில் ஆழமாகப் பதியச் செய்வதால், டைப்பிங் செய்த குறிப்புகளைவிட நினைவில் வைத்துக்கொள்ளும் திறனை அதிகரிக்கக்கூடும். சில ஆய்வுகள், கையெழுத்து மூலம் கற்றுக்கொண்ட தகவல்கள் சுமார் 25–30% வரை அதிகமாக நினைவில் நிற்கலாம் எனக் குறிப்பிடுகின்றன. குறிப்பாக மாணவர்களுக்கு இது பயனுள்ள கற்றல் நுட்பமாக இருக்கிறது.
35
படைப்பாற்றலைத் தூண்டி, மன அழுத்தத்தைக் குறைக்கும் கையால் எழுதும் பழக்கம்.
மெதுவாக கையால் எழுதுவது, நாம் சிந்திக்கும் கருத்துகளை தெளிவாக ஒழுங்குபடுத்த மூளைக்கு கூடுதல் நேரத்தை வழங்குகிறது. இதனால் புதிய யோசனைகள் உருவாகவும் படைப்பாற்றல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, தினசரி டைரி எழுதும் பழக்கம் மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்த உதவுவதுடன், மன அமைதியை ஏற்படுத்தி மன அழுத்தத்தையும் குறைக்கக்கூடிய பயனுள்ள பழக்கமாக கருதப்படுகிறது.
டைப்பிங்கின் நன்மைகள்: வேகமான செயலாக்கம் மற்றும் மல்டி டாஸ்கிங் திறன்.
டைப்பிங் செய்வது தகவல்களை வேகமாகச் செயலாக்கவும், ஒரே நேரத்தில் பல பணிகளை திறம்பட கையாளவும் உதவுகிறது. தொடர்ந்து டைப்பிங் செய்வதால் விரல்கள், கண்கள் மற்றும் மூளை இடையேயான ஒருங்கிணைப்பு மேம்படலாம். குறிப்பாக அலுவலகப் பணிகள் மற்றும் டிஜிட்டல் கற்றலில் இது பயனுள்ளதாக இருக்கும். எனவே, வேகமான செயலாக்கம், மல்டி டாஸ்கிங் மற்றும் ஒருங்கிணைப்புத் திறனை வளர்க்கும் ஒரு நல்ல மூளைப் பயிற்சியாக டைப்பிங் அமைகிறது.
55
நிபுணர்களின் சூப்பர் ஃபார்முலா: கையால் கற்றுக்கொள்ளுோங்கள், டைப் செய்து வேலை செய்யுங்கள்.
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், அவற்றை நீண்ட காலம் நினைவில் வைத்திருக்கவும் கையால் எழுதும் பழக்கத்தைப் பின்பற்றுங்கள். அதே நேரத்தில், தொழில்முறை பணிகள், மின்னஞ்சல்கள் மற்றும் வேகமான குறிப்புகளைத் தயாரிக்க டைப்பிங்கைப் பயன்படுத்தலாம். எனவே, நிபுணர்களின் எளிய சூப்பர் ஃபார்முலா: கையால் எழுதி கற்றுக்கொள்ளுங்கள்; டைப் செய்து வேகமாக வேலை செய்யுங்கள்!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.