Store Tamarind: புளியை ஒரு வருஷம் கறுத்துப்போகாம வெச்சுக்கணுமா? பாட்டி காலத்து டெக்னிக் இதோ!

Published : May 22, 2026, 12:01 PM IST

Grandmas Secret To Keep Tamarind Fresh For A Year: சமையலுக்கு சுவை சேர்க்கும் புளியை வருஷம் முழுக்க கெட்டுப்போகாம வெச்சுக்கணுமா? புளி கறுத்துப்போகாம, பூச்சி பிடிக்காம இருக்க நம்ம பாட்டிங்க செஞ்ச அந்த சீக்ரெட் டிப்ஸ் இதோ..

PREV
17
Grandmas Secret To Keep Tamarind Fresh For A Year

நம்ம இந்திய சமையலறைகள்ல புளி இல்லாம எந்த வேலையும் ஓடாது. சாம்பார், பருப்பு குழம்பு, புளிக்குழம்பு, சட்னினு எது செஞ்சாலும் ஒரு சின்ன துண்டு புளி கண்டிப்பா வேணும். இது சுவைக்கு மட்டும் இல்ல, PMC ஆய்வுப்படி புளியில நிறைய ஆரோக்கிய நன்மைகளும் இருக்கு.

Gas Burner Cleaning: கேஸ் ரொம்ப செலவாகுதா? பர்னரை இப்படி சுத்தம் பண்ணுங்க.! 15 நாள் கேஸ் எக்ஸ்ட்ரா வரும்.!

27
புளி கெட்டுப்போகாமல் இருக்க டிப்ஸ்

ஒவ்வொரு வருஷமும் புளி சீசன் வந்ததும், வீட்டுல இருக்குறவங்க ஒரு வருஷத்துக்குத் தேவையான புளியை வாங்கி வெச்சுடுவாங்க. ஆனா, சரியா கவனிக்கலைன்னா, புளி சீக்கிரமே பூச்சி பிடிச்சு, கறுத்துப்போய், அதோட சுவையையும் இழந்துடும். புளி வருஷம் முழுக்க ஃப்ரெஷ்ஷா இருக்கணும்னா, நம்ம பாட்டி, அம்மா செஞ்ச இந்த முறைகளை நீங்களும் ஃபாலோ பண்ணுங்க.

Sunflower Oil: சன்ஃபிளவர் எண்ணெய் உண்மையிலேயே ஆரோக்கியமானதா? நிபுணர்கள் கூறும் ஷாக்கிங் உண்மை.!

37
உலர்த்துவது மிகவும் முக்கியம்!
புளியை சேமிக்கிறதுக்கு முன்னாடி, அதை சுத்தம் செய்றதுதான் முதல் வேலை. புதுசா வாங்குன புளியில விதைகள், நார், ஓடு எல்லாம் இருக்கும். இதெல்லாம் இருந்தா புளி சீக்கிரம் பூச்சி பிடிச்சிடும். அதனால, முதல்ல இதையெல்லாம் நீக்கி சுத்தம் செய்யணும். புதுப் புளியில கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும். அந்த ஈரப்பதம் அப்படியே இருந்தா பூஞ்சை பிடிச்சிடும். அதனால, புளியை ஒரு நாள் முழுக்க வெயில்ல நல்லா காய வைக்கணும். இப்படி செஞ்சா, ஈரப்பதம் போயி, புளி ரொம்ப நாள் கெடாம இருக்கும்.
47
உப்பைக் கொண்டு பாதுகாப்பாக வையுங்கள்
புளி கெட்டுப்போகாம இருக்க நம்ம பெரியவங்க செஞ்ச ஒரு சூப்பர் டெக்னிக்தான் 'கல்லுப்பு'. புளியை சேமிக்கிற கண்ணாடி பாட்டில் அல்லது மண்பானையோட அடியில முதல்ல கொஞ்சம் கல்லுப்பை போடணும். அதுக்கு மேல ஒரு லேயர் புளியை வெச்சு, மறுபடியும் கொஞ்சம் கல்லுப்பை தூவணும். இப்படி லேயர் லேயரா உப்பு போடும்போது, புளி கெட்டுப்போகாம, சுவையும் மாறாம இருக்கும்.
57
பீங்கான் ஜாடிகள் சிறந்த தேர்வு
புளியை சேமிக்க கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் ஜாடிகள்தான் பெஸ்ட். எந்தக் காரணத்துக்காகவும் ஸ்டீல் அல்லது அலுமினிய டப்பாக்களை பயன்படுத்தாதீங்க. ஏன்னா, புளியில இருக்குற அமிலத்தன்மை அந்த உலோகங்களோட வினைபுரிஞ்சு, புளியை விஷமா மாத்திடும் அபாயம் இருக்கு. பிளாஸ்டிக் டப்பாக்களை விட பீங்கான் ஜாடிகள் புளிக்கு ஒரு இயற்கையான சூழலை தந்து, அதோட நிறத்தையும் சுவையையும் பாதுகாக்கும்.
67
தனியா எடுத்து வெச்சுக்கோங்க
புளியில ஈரப்பதம் பட்டா அது கறுத்துடும். அடிக்கடி ஜாடியை திறந்தா, காத்து உள்ளே போய் புளி சீக்கிரம் கெட்டுடும். அதனால, சமையலுக்கு தினமும் பயன்படுத்த ஒரு மாசத்துக்கு தேவையான புளியை ஒரு சின்ன டப்பாவுல தனியா எடுத்து வெச்சுக்கோங்க. இதனால, பெரிய ஜாடியை அடிக்கடி திறக்க வேண்டிய அவசியம் இருக்காது. முடிஞ்சா, புளியை ஜிப்லாக் கவர்கள்ல போட்டு ஃபிரிட்ஜ்ல வெச்சா, அது வருஷம் முழுக்க புதுசு போலவே நிறம் மாறாம ஃப்ரெஷ்ஷா இருக்கும்.
77
பல வருடம் சேமிக்கலாம்
கடைசியா ஒரு விஷயம், புளியை சேமிச்சு வைக்கிறதும் ஒரு கலைதான். சரியான கவனம் எடுத்துக்கிட்டா, நம்ம சமையலறை சுவைக்கும் ஆரோக்கியத்துக்கும் எந்தக் குறையும் வராது. இந்த பாட்டி காலத்து டிப்ஸை ஃபாலோ பண்ணி, உங்க புளியை வருஷம் முழுக்க பத்திரமா பார்த்துக்கோங்க!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories